Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனவெறியுடன் நடந்து கொண்டார் கேம்பெல்... ஜிம்பாப்வே பந்து வீச்சாளர் உத்சயா பரபரப்பு புகார்

ஹராரே: என்னிடம் இனவெறியுடன் கூடிய உள்நோக்கத்துடன் முன்னாள் கேப்டனும், ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாக இயக்குநருமான அலிஸ்டயர் கேம்பெல் நடந்து கொள்கிறார் என்று ஜிம்பாப்வே சுழற்பந்து வீச்சாளர் பிராஸ்பர் உத்சயா பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.

கேம்பெல் மீது குற்றம் சாட்டி அவர் ஜிம்பாப்வே கிரிக்கெட் தலைவர் வில்சன் மனசேவுக்கு நீண்டதொரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

தன்னிடம் மட்டும் கேம்பெல் பாரபட்சமாக நடப்பதாகவும், அவரது நடவடிக்கை இனவெறியே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும் உத்சயா கூறியுள்ளார். இதுதொடர்பாக உத்சயா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தனிப்பட்ட பகைமை

தனிப்பட்ட பகைமை

என்னிடம் தனிப்பட்ட முறையில் பகைமை பாராட்டுகிறார் கேம்பெல். சமீபத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் நான் அணியின் ஆடும் லெவனில் தேர்ந்தெடுக்கப்படாமல் போனதற்கு அவரே காரணம்.

வெள்ளை நிறத்தவருக்கு முக்கியத்துவம்

வெள்ளை நிறத்தவருக்கு முக்கியத்துவம்

2010-12ல் அனர் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இருந்தபோது கிரிக்கெட் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு வசதியாக வெள்ளை இனத்தவரை பயிற்சியாளர்களாகவும், நிர்வாகிகளாகவும் அவர் நியமித்தார்.

மார்க்கெட்டிங்கில் தலையிட்டார்

மார்க்கெட்டிங்கில் தலையிட்டார்

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் மார்க்கெட்டிங் விவகாரத்தைக் கவனித்துக் கொள்ள தனக்கு சாதகமான டோமினஸ் ஸ்போர்ட் நிறுவனத்தை உருவாக்கி அதை செயல்பட வைத்தார்.

நிதி நிர்வாகத்தை சீரழித்தார்

நிதி நிர்வாகத்தை சீரழித்தார்

அவரது செயல்பாடுகள் காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் நிதி நிர்வாகம் சீர்கேட்டைச் சந்தித்தது. தனது சுயநலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர் செயல்பட்டார்.

இனவெறிக்குப் பலியானேன்

இனவெறிக்குப் பலியானேன்

நான் இன்வெறிக்குப் பலியானவன் என்பதை வேதனையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது என்பதையும் சொல்ல வேண்டிய நிலையில் நான் உள்ளேன் என்றார் அவர்.

பந்து வீச தடை விதிக்கப்பட்டவர்

பந்து வீச தடை விதிக்கப்பட்டவர்

கடந்த 2014 செப்டம்பர் மாதம் ஐசிசியால் பந்து வீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டவர் உத்சயா என்பது குறிப்பிடத்தக்கு. அவரது ஆப் பிரேக் பந்து வீச்சு சட்டவிரோதமானது என்று கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் பந்து வீச தடை செய்யப்பட்டார். இருப்பினும் அவரது பிற வகை பந்து வீச்சு சட்டத்திற்கு உட்பட்டு இருந்ததால் அந்த வகை பந்து வீச்சை அவர் தொடர அனுமதிக்கப்பட்டார்.

Story first published: Monday, July 20, 2015, 10:11 [IST]
Other articles published on Jul 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+