Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க தலைவனயே கலாய்க்கிறீங்களா....கோலிக்காக வெகுண்டெழுந்த ரசிகர்கள்... சரண்டரான உத்தரகாண்ட் போலீசார்

அகமதாபாத்: விராட் கோலியின் டக் அவுட்டை கலாய்த்த உத்தர்காண்ட் போலீசை ஒரு வழியாக்கியுள்ளனர் ரசிகர்கள்.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. பொறுப்பாக ஆட வேண்டிய கோலியும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் பலரும் அவரை விமர்சித்தனர்.

அந்தவகையில் கோலி டக் அவுட்டை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்த போலீசாருக்கு அதுவே பெரிய விழிப்புணர்வாக மாறியுள்ளது.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கோலியின் அரை சதம் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் தொடரிலும் முதல் டி20 போட்டியிலும் அவரின் மோசமான ஆட்டம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. முதல் டி20ல் அவர் சாதனை படைக்க போகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அனைவரின் கனவிலும் மண்னை அள்ளி போடும் விதமாக டக் அவுட் ஆகி வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

களமிறங்கிய போலீஸ்

களமிறங்கிய போலீஸ்

இந்திய அணியின் கேப்டனே பொறுப்பில்லாமல் டக் அவுட் ஆவதா என பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில் உத்தர்காண்ட் போலீஸ் ஒரு படி மேலே போய்விட்டனர். அம்மாநில காவல்துறை ட்விட்டரில், கோலி பெவிலியன் திரும்பும் புகைப்படத்தை போட்டு, ஹெல்மேட் அணிந்தால் மட்டும் போதாது, சரியாக 'ட்ரைவ்' (ஷாட் ஆடவில்லை) செய்யவில்லை என்றால் கோலியை போல் டக் அவுட் தான் ஆகவேண்டும் என சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

வருத்தெடுத்த ரசிகர்கள்

வருத்தெடுத்த ரசிகர்கள்

கோலியை வைத்து கிண்டல் செய்த உத்தர்காண்ட் போலீசாரை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வருத்தெடுத்து வந்தனர். இதனால் உடனடியாக அந்த பதிவை நீக்கிய அவர்கள், விளக்கம் ஒன்றை பதிவிட்டனர். இது யாராலும் கண்டுக்கொள்ளபடவில்லை. அதில், யாரின் உணர்வையும் கஷ்டப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது. விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்திருப்பதால் இந்த போட்டியிலும் அவரின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதனை ரசிகர்கள் நேரில் காண முடியாது. கொரோனா பரவல் காரணமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, March 16, 2021, 21:03 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+