வைபவ் சூர்யவன்ஷியிடம் தோனியின் 2 அம்சங்களை நான் பார்க்கிறேன்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து
மும்பை: வைபவ் சூர்யவன்ஷியின் பேக்-ஃபுட் ஸ்டான்ஸ் மற்றும் ஆஃப்-ஸ்டம்ப் கார்டுஆகியவை, புகழ்பெற்ற தோனியைப் போலவே இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார். 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 2026 ஐபிஎல் சீசனில் பவர்பிளே ஓவர்களில் சிறந்த புதிய பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடித்து அசத்தினார்.
சூர்யவன்ஷி 48-க்கும் அதிகமான சராசரியிலும், 237.30 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 776 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது இந்த சிறப்பான ஆட்டம் ஆரஞ்சு தொப்பியை வெல்ல உதவியதோடு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு கொண்டு செல்லவும் முக்கிய காரணமாக அமைந்தது.

இது குறித்து யூடியூப் சேனலில் உத்தப்பா, "வைபவ் சூர்யவன்ஷி காரணமாக பேட்டிங் தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய மாற்றத்தை நாம் காணப்போகிறோம். மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒன்றை அவர் கண்டறிந்துள்ளார். அவரது பேட்டிங் முறை என்னவென்றால், அவர் Front foot எடுத்து வைக்காமல், back foot-ல் நிற்கிறார். தோனி எப்போதும் பந்தின் கீழ் செல்வதற்காக பின் back foot-ல் காத்திருப்பார். இவருக்கு எதிராக துல்லியமான யார்க்கர் வீசுவது மட்டுமே ஒரே வழி" என்றார்.
"அவர் சற்றே குனிந்து, ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே நிற்கிறார். இதனால் குட் லென்த், ஷார்ட் பால் மற்றும் பவுன்சர் போன்ற பந்துகளுக்காக அவர் காத்திருக்கிறார். பந்துவீச்சாளர்கள் பொதுவாக வீசும் இந்த இடங்களில் பந்து விழுந்தால், அவரால் எளிதாக ரன்களை குவிக்க முடிகிறது. இளம் கிரிக்கெட் வீரர்கள் பின்பற்றக்கூடிய ஒரு பேட்டிங் யுக்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். வைபவ் காட்டியுள்ள இந்த ஆட்டம் மூலம் நன்மையான ஒரு புதிய மாற்றத்தை நாம் நோக்கிச் செல்கிறோம்" என்றார்.
ஐபிஎல் 2026 தொடரில் சூர்யவன்ஷியின் சிறப்பான ஆட்டம், இங்கிலாந்திற்கு எதிரான சமீபத்திய டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இதன் மூலம் இந்திய அணிக்காக விளையாடிய மிக இள வயது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்த 15 வயது வீரர் அந்த தொடரில் மெதுவாகத் தொடங்கினாலும், ஜிம்பாப்வேக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் சிறப்பாக மீண்டு வந்தார். அங்கு மூன்று போட்டிகளில் 196-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 151 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை வென்ற மிக இள வயது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.


Click it and Unblock the Notifications

