Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs SL A: வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்.. காலை வாரிய பிராப்சிம்ரன்.. ருதுராஜ் அரைசதம்

டம்புல்லா: இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் தொடக்க ஆட்டத்தில், இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கலக்கி வரும் 15 வயதான வைபவ், 12 பந்துகளைச் சந்தித்து 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டாஸ் வென்ற இந்திய ஏ கேப்டன் திலக் வர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்ததையடுத்து, பிரப்சிம்ரன் சிங்குடன் இணைந்து வைபவ் இன்னிங்ஸைத் தொடங்கினார்.களமிறங்கியதும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இடதுகை பேட்ஸ்மேன் வைபவ், ஆஃப்-சைடில் நேர்த்தியாக ஒரு பவுண்டரியை விரட்டி இன்னிங்ஸைத் தொடங்கினார்.

அடுத்த பந்திலேயே மீண்டும் ஒரு பவுண்டரியை அடித்த அவர், எதிரணியினருக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். இருப்பினும், அடுத்த ஓவரை பவுண்டரியுடன் தொடங்கியபோது, இலங்கை ஏ அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிகா கருணாரத்னே, தனது துல்லியமான கட்டர்கள் மற்றும் மெதுவான பந்துகளைப் பயன்படுத்தி வைபவ்விற்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

பந்தின் வேக மாற்றங்களை கணிக்கத் தவறிய வைபவ், முகமது ஷிராஸின் ஓவரில் ஆட்டமிழந்தார். பந்தின் அடியில் சென்று மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடிக்க அவர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. பந்து போதிய உயரத்தைப் பெறாததால், சர்க்கிள் விளிம்பில் நின்றிருந்த சகான் ஆராச்சிகே, முன்னோக்கி ஓடி வந்து தரையோடு தரையாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

வைபவ் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்ப, இலங்கை ஏ அணிக்கு ஆரம்ப கட்டத்திலேயே சிறப்பான திருப்புமுனை கிடைத்தது.இவருடன் தொடங்கிய பிரப்சிம்ரன் சிங்கும் விரைவிலேயே ஆட்டமிழக்க, இந்தியா ஏ அணி 5 ஓவர்கள் முடிவில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 2024 டிசம்பரில் பீகார் அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் அறிமுகமான வைபவ், இதுவரை 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

IND vs AFG: முதல் டெஸ்டில் இந்திய அணி படைத்த 5 மாபெரும் சாதனைகள்

IND vs AFG: முதல் டெஸ்டில் இந்திய அணி படைத்த 5 மாபெரும் சாதனைகள்

ஐபிஎல் தொடரில் தனது டி20 திறமையை அடிக்கடி வெளிப்படுத்தி வரும்போதும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முதிர்ச்சியடைய அவருக்கு இன்னும் அதிக அனுபவம் அவசியமாகிறது. தற்போது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, பிரியான்ஸ் ஆர்யா 32 ரன்களில் ஆட்டமிழக்க,ருதுராஜ் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இந்தப் போட்டியை சோனி லிவ் ஒடிடி மற்றும் சோனி டென் சேனல்களில் கண்டு களிக்கலாம்.

Story first published: Tuesday, June 9, 2026, 12:44 [IST]
Other articles published on Jun 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+