Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது பச்ச குழந்தையா.. ஆப்பு வச்சான் பாரு சின்னப் பையன்.. பாகிஸ்தானை வெளுத்துவிட்ட இந்திய அணி!

நிஷின்: இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பச்சக் குழந்தை என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சயீம் அயூப் கிண்டல் செய்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பச்சக் குழந்தை தான் ஏசியன் கேம்ஸில் உங்களை தோற்கடித்தது என்று சொல்லுங்கள் என்று சயீம் அயூப்பை டேக் செய்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஏசியன் கேம்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Vaibhav Sooryavanshi

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப் தேவையில்லாத செய்கைகளை காட்டினார். வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை கைப்பற்றிய சயீம் அயூப், உடனடியாக குழந்தையை தாலாட்டுவது போல் செய்து காட்டினார். இதன் மூலமாக வைபவ் சூர்யவன்ஷி ஒரு பச்சக் குழந்தை என்றும் மறைமுகமாக விமர்சித்ததாக பார்க்கப்பட்டது.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இதனை பார்த்த வைபவ் சூர்யவன்ஷி முறைத்து கொண்டே நடந்து சென்றார். இதன்பின் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், வைபவ் சூர்யவன்ஷி ஆவேசமாக கொண்டாடினார். சயீம் அயூப் விக்கெட்டை கைப்பற்றிய போதும் சூர்யவன்ஷி கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி சார்பாக ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சயீம் அயூப்பை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து, இந்த அவமானம் தேவையா.. அந்த பச்சக் குழந்தையிடம் தோற்றுவிட்டோம் என்று ஊரில் போய் சொல்லு என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அணியின் போராட்டமும் இந்திய ரசிகர்கள் மத்தியில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

Story first published: Saturday, October 3, 2026, 14:56 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+