Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி ஆல்ரவுண்டராக மாற திட்டம்? இந்திய அணி பயிற்சியாளர் விளக்கம்

ஹராரே: 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை இப்போதைக்கு ஆல் ரவுண்டராக மாற்றும் அவசரம் ஏதும் இந்திய அணிக்கு இல்லை என்றும், அவரது பேட்டிங்கில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தப்படும் என்றும் தற்காலிக சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் கடந்து சூர்யவன்ஷி அசத்தினார். இதற்கு முன்னதாக இதே ஹராரே மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் 175 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அந்தத் தொடரில் பார்ட் டைம் சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு ஒரு விக்கெட்டையும் அவர் கைப்பற்றியிருந்தார்.

Vaibhav sooryavnshi

இளம் வயதிலேயே இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், அவரை ஒரு ஆல்-ரவுண்டராக மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஆல்-ரவுண்டர்களின் தேவை அதிகமாக உள்ளது. தற்போதைய தொடரில் இல்லாத முதன்மை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் ஆல்-ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் தான். இருப்பினும் சூர்யவன்ஷி விஷயத்தில் நிதானமாக செயல்பட இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது.

IND vs ZIM: யோ! என்ன மாதிரி பவுலிங் யா இது? டிராகன் போல் நெருப்பை கக்கிய மாயங் யாதவ்

IND vs ZIM: யோ! என்ன மாதிரி பவுலிங் யா இது? டிராகன் போல் நெருப்பை கக்கிய மாயங் யாதவ்

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுனில் ஜோஷி "இப்போதைக்கு அவரது பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துவோம். அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த மைதானம் அவருக்கு மிகவும் சாதகமான ஒன்றாக உள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் அவர் இங்கு சிறப்பாக விளையாடினார். பேட்டிங்கில் அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிசிசிஐயின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் அவருடன் இணைந்து பணியாற்றுவோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரோகித் சர்மா-வை தொந்தரவு செய்ய கூடாது.. அகார்கர், கம்பீருக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை

ரோகித் சர்மா-வை தொந்தரவு செய்ய கூடாது.. அகார்கர், கம்பீருக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை

"அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்ஷ் துபே ஆகிய மூவரும் நல்ல ஆல்-ரவுண்டர்கள். அபிஷேக் தனது பந்துவீச்சை பெருமளவில் மேம்படுத்தியுள்ளார். ஹர்ஷ் துபேயும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று ஜோஷி கூறினார். மேலும், "எங்களிடம் திலக் வர்மாவும் இருக்கிறார். தேவைப்படும் போது அவரும் பந்துவீசக்கூடியவர். அவரிடம் பந்துகளை வீணடிக்காமல் டாட் பால்களை வீசுவது மற்றும் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவது குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

Story first published: Saturday, July 25, 2026, 10:59 [IST]
Other articles published on Jul 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+