வைபவ் சூர்யவன்ஷி போட்ட பதிவு.. விசயம் கன்ஃபார்ம் போலயே.. சம்பவம் உறுதி?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.15 வயதில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வைபவ் சூரியவன்ஷி புதிய சாதனை படைத்தார்.
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவர் பெஞ்சிலே அமர்ந்திருந்தார். வைபவ் சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என இந்திய அணி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் பலரும் வைபவ் சூரியவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அவரது திறமையை வீணடிக்க கூடாது என்றும் வலியுறுத்தி வந்தனர். இதற்கு காரணம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 776 ரன்கள் குவித்து 237 ஸ்ட்ரைக் ரைட்டில் விளாசி இருந்தார். இதன்மூலம் வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோரை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார்.
இப்படி அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியா ஏ, உள்ளிட்ட அனைத்து தொடர்களிலும் வைபவ் சூரியவன்ஷி பட்டையை கிளப்பி இருக்கிறார் .இதன் காரணமாக வைபவ் சூர்யவன்ஷியை உடனே சேர்க்க வேண்டும் என்று ரசிகர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த தருணத்தில் தான் சஞ்சு சாம்சன் தொடர்ந்து மூன்று போட்டிகளாக தடுமாறி வரும் நிலையில், அவரை நீக்கிவிட்டு வைபவ் சூரியவன்ஷியை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
இதனை மறைமுகமாக சமூக வலைத்தளத்தில் வைபவ் சூர்யவன்ஷி குறிப்பிட்டிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூறாவளி எமோஜி போட்டு புதிய அத்தியாயம் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவது உறுதியாகிவிட்டது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வைபவ் அறிமுகம் ஆகப் போகிறார் என்பதை அவரிடம் அணி நிர்வாகம் தெரிவித்திருக்கலாம் என்றும் இதனை தான் அவர் மறைமுகமாக ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் வைபவ் அறிமுகமானால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர் என்று பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன்பு 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் அந்த சாதனையை படைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications

