Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4,6,4,4 வைபவ் சூர்யவன்ஷி ஒரே ஓவரில் அதிரடி ஆட்டம்.. யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அபாரம்

பெங்களூரு: துலீப் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிராக ஈஸ்ட் ஜோன் அணியின் இளம் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் குவித்து அசத்திய அவர், மூன்றாவது நாளில் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சென்ட்ரல் ஜோன் அணியின் கேப்டன் ரஜத் படிதார் பிடித்த அற்புதமான கேட்ச் மூலம் சூர்யவன்ஷியின் இந்த சிறப்பான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பெங்களூரில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்ய 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஈஸ்ட் ஜோன் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஜோடி மீண்டும் ஒருமுறை சிறப்பான தொடக்கத்தை அளித்தது.

Vaibhav sooryavanshi

தொடக்கத்தில் சூர்யவன்ஷி சற்று நிதானமாக விளையாடினார். புதிய பந்திற்கு எதிராக தான் எதிர்கொண்ட முதல் 15 பந்துகளில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், எட்டாவது ஓவரில் சிக்ஸர் அடித்து தனது அதிரடியைத் துவக்கினார். பின்னர் யஷ் தாக்கூர் வீசிய 14-வது ஓவரில் சூர்யவன்ஷி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தை உயர்த்தினார். அந்த ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 40 ரன்களைக் கடந்தார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம்.. ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம்.. ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

வலது கை வேகப்பந்து வீச்சாளரான தாக்கூரின் பந்தை மிட்-விக்கெட் திசையில் அடித்து அந்த ஓவரை பவுண்டரியுடன் துவக்கினார் சூர்யவன்ஷி. அதற்கு அடுத்த பந்தில் லாங்-ஆஃப் திசையில் ஒரு நேர்த்தியான சிக்ஸரைப் பறக்கவிட்டார். இதற்கு பதிலடியாக யஷ் தாக்கூர் வீசிய பவுன்சர்களையும் கணித்து விக்கெட் கீப்பருக்கு பின்னால் பவுண்டரிக்கு அனுப்பினார் சூர்யவன்ஷி. எனினும், அந்த ஓவரின் இறுதிப் பந்தில் சூர்யவன்ஷி தனது விக்கெட்டை இழந்தார்.

அவர் முழங்காலிட்டு ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்ற போது, பந்து தூரமாகச் செல்லாமல் உயரமாக மட்டுமே எழுந்தது. அதை சென்ட்ரல் ஜோன் கேப்டன் ரஜத் படிதார் டீப் மிட்-விக்கெட் திசையில் இருந்து ஓடிவந்து, டைவ் அடித்து மிகச் சிறப்பாகப் பிடித்தார்.

சூர்யவன்ஷியின் இந்த அதிரடியான 40 ரன் இன்னிங்ஸில் 3 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இவரது பங்களிப்பால் ஈஸ்ட் ஜோன் அணி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்தது.

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற போகும் ஆர்சிபி ஸ்டார் வீரர்

Also Read

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற போகும் ஆர்சிபி ஸ்டார் வீரர்

இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடிக்கும் வரலாற்று சாதனையை சூர்யவன்ஷி நூலிழையில் தவறவிட்டாலும், இத்தொடரின் வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளவயது பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் ஏற்கனவே படைத்தார். முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய அவர் 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 1, 2026, 17:27 [IST]
Other articles published on Sep 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+