Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Vaibhav sooryavanshi: யார் கண் பட்டுச்சோ? காயமடைந்த வைபவ்.. ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்?

ஐதராபாத்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் போது தொடைத் தசைப் பிடிப்பு வலியால் அவதிப்பட்டு, களத்தைவிட்டு வெளியேறினார். ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில், 15 வயதான வைபவ், இஷான் கிஷன் அடித்த பவுண்டரியைத் துரத்திச் சென்றபோது இந்தக் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னரும் அவரால் தொடர்ந்து களத்தில் நீடிக்க முடியவில்லை.

இதனையடுத்து 2 பேர் வைபவ் சூர்யவன்ஷியை கை தாங்கலாக பிடித்து, மைதானத்தை விட்டு அழைத்து சென்றனர். வைபவ் சூர்யவன்ஷியை நம்பி தான் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கே உள்ளது. ஆனால் தற்போது அவர் காயமடைந்துள்ளதால், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவருக்கு 15 வயது தான் என்பதால், இந்த காயம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

இந்த சீசனில் தனது அபாரமான ஆட்டத்தால் கவனம் ஈர்த்திருந்த வைபவ், நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து அனைவரையும் கவர்ந்திருந்தார். அவரது இரண்டாவது ஐபிஎல் சதம் ஆகும். 32 ரன்களில் வைபவ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஐதராபாத் அணி வீரர்கள் தவறவிட்டனர். கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, வெறும் 37 பந்துகளில் 103 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வலு சேர்த்தார்.

இதில் 12 சிக்ஸர்களும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். சாகிப் ஹுசைன் பந்தில் சிக்ஸர் அடித்து 36 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றின் மூன்றாவது அதிவேக சதத்தை வைபவ் பதிவு செய்தார். அவரது முந்தைய 35 பந்து சதம் மற்றும் கிறிஸ் கெய்லின் 30 பந்து சதமுமே இதற்கு முன்னுள்ள சாதனைகள். பிரஃபுல் ஹிங்கே வீசிய முதல் ஓவரிலேயே நான்கு சிக்ஸர்களை விளாசி, அதிரடி தொடக்கத்தை வைபவ் கொடுத்தார். முதல் விக்கெட்டுக்கு 14 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.

பின்னர் துருவ் ஜூரேலுடன் இணைந்து 112 ரன்கள் குவித்தார். ஜூரேல் 51 ரன்கள் எடுத்தார். தனது அரைசதத்தை வெறும் 15 பந்துகளில் எட்டிய வைபவ், சதம் பதிவு செய்த உடனேயே சாகிப் ஹுசைனின் பந்தில் எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார். டோனோவன் ஃபெரீராவின் பங்களிப்பும், பாட் கம்மின்ஸின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் போட்டிக்கு மேலும் விறுவிறுப்பளித்தன.

Story first published: Saturday, April 25, 2026, 23:35 [IST]
Other articles published on Apr 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+