ICC U19 உலககோப்பை பைனல்: 411 ரன்கள் குவித்த இந்திய அணி.. பவுலிங்கில் கதறிய இங்கிலாந்து..வைபவ் அபாரம்
ஹராரே: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்து அதிரடி காட்டினார். வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, இந்திய அணியை பிரமாண்டமான 411/9 என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.
இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆரன் ஜார்ஜ் விரைவில் வெளியேறினாலும், சூர்யவன்ஷியும் கேப்டன் ஆயுஷ் மகாத்ரேவும் அமைத்து இந்திய அணியை அபாரமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இந்த ஜோடியில் சூர்யவன்ஷி மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி 55 பந்துகளில் சதம் விளாசினார். கேப்டன் மகாத்ரேவும் அரை சதம் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார்.

சூர்யவன்ஷி 175 ரன்களில் அவுட் ஆன பிறகு, இந்தியா சிறிய அளவில் விக்கெட் சரிவை சந்தித்தது. இருப்பினும், அபிஜியன் குண்டு மற்றும் கனிஷ்க் சவுகான் ஆகியோர் அணியை வலுவான நிலையில் முடிப்பதற்கு உதவினர். இதில், கனிஷ்க் சவுகான் அடித்த பவுண்டரியுடன் இந்திய அணி 400 ரன்களைக் கடக்க உதவியது. மெதுவாக ஓவர் வீச்சுக் காரணமாக இங்கிலாந்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டது; இதனால் 30 யார்டு சர்க்கிலில் ஒரு கூடுதல் ஃபில்டர் இருக்க வேண்டியிருந்தது.
இன்னிங்ஸின் கடைசி ஓவர்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஜேம்ஸ் மின்டோவின் பந்துவீச்சில் அம்ப்ரீஷ் கிளீன் போல்டாக, செபாஸ்டியன் மார்கன் ஓவரில் கிலான் படேல் கேட்ச் ஆனார். ஹெனல் படேல் ரன் அவுட் ஆனதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விக்கெட் கீப்பர் தாமஸ் ரெவ் பந்தை ஸ்டம்புகளுக்கு முன் பிடித்ததால், அவரது கை ஸ்டம்புகளைத் தட்டிய பின்னரே ஹெனல் அவுட் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், கனிஷ்க் சவுகான் கடைசி கட்டத்தில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அண்டர் 19 அணி 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எட்டியது. நடப்பு தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 404 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முறியடித்துள்ளது. அது மட்டும் இல்லாமல், அண்டர் 19 உலககோப்பையில் நாக் அவுட் சுற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது.


Click it and Unblock the Notifications