Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U19 உலககோப்பை பைனல்: வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசல்.. கில்கிறிஸ்ட், பாபர் சாதனை முறியடிப்பு

ஹராரே: 2026 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், வைபவ் சூர்யவன்ணி, அண்டர் 19 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறந்த இன்னிங்சை ஆடியுள்ளார்.

தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 14 வயதான சூர்யவன்ஷி, 32 பந்துகளில் அரைசதம் அடித்து, ஒரு வரலாற்று இன்னிங்ஸைத் தொடங்கினார்.இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரேவுடன் இணைந்து சூர்யவன்ஷி, இரண்டாவது விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தார்.

இங்கிலாந்து பந்து வீச்சைச் சிதறடித்த அவர், 55 பந்துகளில் மின்னல் வேக சதம் விளாசினார். இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் பதிவான இரண்டாவது அதிவேக சதமாகும்.அவர் இறுதியில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 15 சிக்சர்களும் 15 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்சத் தனிப்பட்ட ஸ்கோரை அவர் பதிவு செய்தார்.

இதே போன்று அண்டர் 19 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பாபர் அசாமின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்தார். பாபர் அசாம், கடந்த 2010ஆம் ஆண்டு அண்டர் 19 உலககோப்பையில் சதம் அடித்த நிலையில், தற்போது புதிய சாதனையை வைபவ் படைத்திருக்கிறார். இத்தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் (18) சாதனையை சூர்யவன்ஷி முறியடித்தார்.

இறுதிப் போட்டியின் 15 சிக்சர்கள் உட்பட, அவரது மொத்த சிக்சர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து, ஒரே உலகக் கோப்பைத் தொடரில் ஒரு வீரரால் அடிக்கப்பட்ட புதிய உலக சாதனையாக இது பதிவானது.கடந்த 2025 டிசம்பரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 14 சிக்சர்கள் அடித்த தனது சொந்த சாதனையை சூர்யவன்ஷி இந்த ஆட்டத்தில் முறியடித்தார்.

இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்சர்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். அவரது 175 ரன்கள், ஐசிசி நடத்தும் எந்த வயதுப் பிரிவு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் அடிக்கப்பட்ட அதிகபட்சத் தனிப்பட்ட ஸ்கோர் ஆகும். 2007 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடம் கில்கிரிஸ்ட் அடித்த 149 ரன்கள் சாதனையை இது விஞ்சியது. எனினும், இது இந்த உலகக் கோப்பைத் தொடரில் அடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய ஸ்கோர் மட்டுமே.

Story first published: Friday, February 6, 2026, 15:52 [IST]
Other articles published on Feb 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+