Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ அறிவுரை.. "சிக்ஸர் அடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்"

மும்பை: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், இளம் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இனி எல்லா பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற பாணியை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி அயர்லாந்திடம் 0-2 என தொடரை இழந்தது. அடுத்து இங்கிலாந்திடம் 0-3 என தொடரை இழந்து இருக்கிறது. இந்திய பேட்டிங் வரிசை இந்த இரண்டு தொடர்களிலும் ஏமாற்றம் அளித்த நிலையில், தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி மீது விமர்சனம் எழுந்துள்ளது.

Vaibhav Suryavanshi and Abhishek Sharma to control their six hitting approach says BCCI official

அவர்கள் இருவரும் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டுகளை வாரி வழங்குவதே பேட்டிங் சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் சிக்ஸர் அடிக்கும் திறன் சிறப்பானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அதைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் சூழலுக்கு ஏற்ப விளையாடப் பழக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தனது 15 வயது 99 நாட்களில் இந்திய அணியில் அறிமுகமாகி, சச்சின் டெண்டுல்கரின் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பி இருக்கிறார். தான் விளையாடிய 3 போட்டிகளிலும் 14, 13 மற்றும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார்.

2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 776 ரன்களை 237.30 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் குவித்து, 72 சிக்ஸர்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச அரங்கில் பெரிய ஷாட்களை அடிக்க முயன்று தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறார்.

மறுபுறம், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் இதே போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அயர்லாந்து தொடரில் 49 மற்றும் 0 ரன்களும், இங்கிலாந்து தொடரில் 59, 43, 10 மற்றும் 16 ரன்களும் எடுத்துள்ள அவர், ஓரளவிற்கு ரன்கள் குவித்த போதிலும் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான மேட்ச்-வின்னிங் தாக்கத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை.

வைபவ் சூர்யவன்ஷியின் வீக்னஸ் தெரிஞ்சு போச்சு.. ஐபிஎல் டேட்டா-வை வைத்து வீழ்த்திய இங்கிலாந்து

வைபவ் சூர்யவன்ஷியின் வீக்னஸ் தெரிஞ்சு போச்சு.. ஐபிஎல் டேட்டா-வை வைத்து வீழ்த்திய இங்கிலாந்து

வெறும் சிக்ஸர்களை மட்டுமே நம்பி விளையாடும் இவர்களின் இந்த அதிரடிப் பாணி, இந்திய அணியின் வெற்றியைப் பாதிப்பதால், இவர்களது பேட்டிங் பாணியைக் கண்காணிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, July 10, 2026, 16:58 [IST]
Other articles published on Jul 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+