Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20: வைபவ் சூர்யவன்ஷி 331 ஸ்டைரக்ரேட்டில் அரைசதம்.. சச்சின் மகன் அர்ஜூனும் மிரட்டல் 50

சென்னை: ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், 14 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி பட்டையை கிளப்பியுள்ளார். டி.ஒய். பாட்டீல் டி20 கோப்பையில் இந்தியன் நேவி அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய அவர், 19 பந்துகளில் 63 ரன்களைக் குவித்து அசத்தினார். இது அவருக்குச் சிறந்த பயிற்சி ஆட்டமாக அமைந்தது.

டி.ஒய். பாட்டீல் ப்ளூ அணிக்காகக் களமிறங்கிய வைபவ், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 331.58 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் மழை பொழிந்தார். தனது அதிரடியான பேட்டிங்கால் கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பி வருகிறார் வைபவ்.

vaibhav suryavanshi

முன்னதாக, 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் மிக இளைய சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்த அவர், இந்தியர் அடித்த அதிவேக சதம் என்ற பெருமையையும் பெற்றார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

சர்வதேச இளையோர் போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி தனது முத்திரையைப் பதித்தார். 25 இளையோர் ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 56.48 என்ற சராசரியுடன் 1,412 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 165.72 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் நான்கு சதங்கள் மற்றும் ஏழு அரைசதங்கள் அடங்கும். இளையோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்புத் தேர்வுகளைத் தவிர்த்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய வைபவ், இதுவரை 18 டி20 போட்டிகளில் 701 ரன்கள் அடித்துள்ளார். இதில் 204.37 என்ற வியக்கத்தகு ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். அவர் விளையாடிய 12 இன்னிங்ஸ்களில் 150 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டை எட்டியுள்ளார்.

இந்த டி.ஒய். பாட்டீல் டி20 கோப்பையிலும் இந்தியன் நேவி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி, டி.ஒய். பாட்டீல் ப்ளூ அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய வைபவ் முதல் ஓவரிலேயே நான்கு பந்துகளில் 16 ரன்களை விளாசி, 12 பந்துகளில் 43 ரன்களுக்கு விரைந்தார். அவர் ஐந்தாவது ஓவரில், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இறுதியாக, மேலும் ஒரு சிக்ஸரை அடித்த பிறகு 19 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இந்தியன் நேவி அணியில் குன்வர் பாட்டக் 53 பந்துகளில் 87 ரன்களும், கேப்டன் சூரஜ் வசிஷ்ட் 9 பந்துகளில் 13 ரன்களும், நிதின் தன்வர் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தனர். டி.ஒய். பாட்டீல் ப்ளூ அணியில் யாஷ் துல் 12 ரன்களும், சர்பராஸ் கான் 27 ரன்களும், கேப்டன் சஷாங்க் சிங் 20 ரன்களும், அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர்.

Story first published: Thursday, February 26, 2026, 17:01 [IST]
Other articles published on Feb 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+