Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி-யை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சி.. கோடிகளை கொட்ட தயார்

மும்பை: ஐபிஎல் 2026 சீசனுக்குப் பிறகு, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் புதிய சூப்பர்ஸ்டார் ஆக உருவெடுத்துள்ளார், ஆரஞ்சு கேப், MVP விருது, வளர்ந்து வரும் வீரர் என பல விருதுகளை வைபவ் சூர்யவன்ஷி வாங்கியுள்ள நிலையில், அவரை தங்கள் விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்ய முன்னணி பிராண்டுகள் ஆர்வமாக உள்ளன.

2026 ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷியின் அசாதாரண ஆட்டம், அவரை இந்திய விளையாட்டு உலகில் தேடப்படும் முகமாக மாற்றியுள்ளது. விளையாட்டுப் பானங்கள், கிரிக்கெட் உபகரணங்கள், ஊட்டச்சத்துப் பொருட்கள், காலணிகள் போன்ற பல்வேறு துறைகளிலிருந்து முன்னணி பிராண்டுகள் விளம்பர ஒப்பந்தங்களுக்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஐபிஎல் 2026 தொடரில் சூர்யவன்ஷி 776 ரன்கள் குவித்தார். 16 இன்னிங்ஸ்களில் 48.5 சராசரி, 237.3 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடினார். ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்ததன் மூலம் ஆரஞ்சு கேப் மற்றும் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP) விருதுகளைப் பெற்றார். ரன் பட்டியலில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் போன்றோராலும் அவரை முந்த முடியவில்லை.

இந்தச் சாதனைக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்சு கேப் வென்ற மிக இளம் வீரர் ஆவார். 15 ஆண்டுகள் 65 நாட்கள் ஆன அவர், சாய் சுதர்சன் வைத்திருந்த முந்தைய சாதனையை எளிதாக முறியடித்தார்.

சூர்யவன்ஷியை நீண்டகால முதலீடாக பிராண்டுகள் பார்ப்பதால், ஆரம்பத்திலேயே அவருடன் இணைய ஆர்வம் காட்டுகின்றன. '''ஃபர்ஸ்ட்-மூவர் அட்வான்டேஜ்' பெற அவரை ஒப்பந்தம் செய்ய பிராண்டுகள் நிற்கின்றன. அவருக்கு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை உள்ளது என்பதால் நிலையாக விளையாடும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு விளம்பரச் சந்தையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுவாரஸ்யமாக, நிறுவனங்கள் தற்போது பாரம்பரிய நீண்ட கால ஒப்பந்தங்களுக்குப் பதிலாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான குறுகிய கால ஒப்பந்தங்களை விரும்புகின்றன. இது வீரரின் எதிர்கால ஆட்டம் மற்றும் பிரபலத்தைப் பொறுத்து வழங்குகிறது.

வணிக ரீதியிலான ஆர்வம் அதிகரித்து வந்தாலும், சூர்யவன்ஷியின் முன்னேற்றம் கவனமாக நிர்வகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அவரது குடும்பத்திற்கு விளம்பர வாய்ப்புகளைக் கையாளுவதற்கும், அவரது வயது மற்றும் ஆளுமைக்கு ஏற்ற ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவதற்கும் உதவுகிறது.

வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு கேப், MVP விருது மற்றும் ஐபிஎல் சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆக டாடா சியரா காரையும் வென்றிருந்தாலும், இன்னும் 15 வயதே ஆன அவருக்கு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை காத்திருக்கிறது.

Story first published: Tuesday, June 2, 2026, 16:40 [IST]
Other articles published on Jun 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+