For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வைபவ் சூர்யவன்ஷி மெகா உலக சாதனை.. U19 கிரிக்கெட்டில் ரெக்கார்டுகளை உடைத்து எறிந்தார்

லண்டன்: 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இருந்த வைபவ் சூர்யவன்ஷி அதன் பிறகு அதே போல் ஆடுவாரா? அதே ஃபார்மை அவரால் தொடர முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அதற்கு பதில் சொல்லும் வகையில் இந்தியா U-19 மற்றும் இங்கிலாந்து U-19 அணிகளுக்கு இடையே அண்மையில் முடிந்த யூத் ஒருநாள் தொடரில் (Youth ODI series) வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறார்.

இந்த தொடரில் இந்திய இளம் அணி ஆயுஷ் மாத்ரே தலைமையில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதில், 14 வயதே ஆன சூர்யவன்ஷி தொடரின் நட்சத்திர வீரராக ஜொலித்தார். ஐந்து போட்டிகளில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, மொத்தம் 355 ரன்கள் குவித்து அசத்தினார். 71 என்ற அபார சராசரியுடனும், 174.01 என்ற நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டுடனும் அவர் ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதமும் அடங்கும்.

Vaibhav Suryavanshi Under 19 cricket

யூத் ஒருநாள் தொடர் வரலாற்றில், இருதரப்பு ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இது ஐந்தாவது அதிகபட்சமாகும். தொடக்க ஆட்டக்காரர்களில் இது இரண்டாவது சிறந்த சாதனையாகும்.

ஆனால், சூர்யவன்ஷி நிகழ்த்திய மிக முக்கியமான சாதனை என்னவென்றால், U-19 ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு தொடரில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து, 150-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்த முதல் வீரர் இவர்தான். இதற்கு முன், வங்கதேசத்தின் டௌஹித் ஹிரிடி 2019-ல் இலங்கை அணிக்கு எதிராக 431 ரன்கள் எடுத்தபோது, அவரது ஸ்ட்ரைக் ரேட் 114.62 ஆக இருந்தது. சூர்யவன்ஷியின் ஸ்ட்ரைக் ரேட் 174.01 என்பதாக இருந்தது.

நான்காவது ஒருநாள் போட்டியில் சூர்யவன்ஷி அடித்த சதம், வெறும் 52 பந்துகளில் எட்டப்பட்டது. இது யூத் ஒருநாள் போட்டி வரலாற்றில் மிக வேகமாக அடிக்கப்பட்ட சதம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும், அவரது 78 பந்துகளில் 143 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 183.33) என்ற ஆட்டம், 2013-ல் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் கம்ரான் குலாம் அடித்த 66 பந்துகளில் 102 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் வைபவ் 31 பந்துகளில் எடுத்த 86 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 277.41), யூத் ஒருநாள் போட்டி வரலாற்றில் மிக வேகமாக அடிக்கப்பட்ட 80+ ரன்கள் என்ற சாதனையைப் படைத்தது. இது 2004 U-19 உலகக் கோப்பையில் சுரேஷ் ரெய்னா ஸ்காட்லாந்துக்கு எதிராக 38 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த சாதனையை முறியடித்தது.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த தொடர்ச்சியான மற்றும் அதிவேகமான ஆட்டங்கள் இந்திய அணிக்கு அவர் விரைவில் ஆட இருப்பதை உணர்த்துவதாக உள்ளது.

Story first published: Wednesday, July 9, 2025, 8:12 [IST]
Other articles published on Jul 9, 2025
English summary
Vaibhav Suryavanshi breaks multiple world records in Under 19 cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+