Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"4 மாதத்தில் நிறைய ஏற்ற இறக்கம் பார்த்துட்டேன்".. பிளேயிங் 11 நீக்கம் பற்றி வைபவ் சூர்யவன்ஷி பேச்சு

ஹராரே: இங்கிலாந்து டி20 தொடரின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக பேசி இருக்கிறார். கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் தான் என்று அவர் முதிர்ச்சியுடன் பதில் அளித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவரால் ஒரு போட்டியில் கூட 20 ரன்களை தாண்டி ரன் குவிக்க முடியவில்லை. அதனால் ஐந்தாவது போட்டியின் போது அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து அவர் ஜிம்பாப்வே டி20 தொடரில் பிளேயிங் லெவனில் இடம் பெற்று ஆட இருக்கிறார்.

Vaibhav Suryavanshi breaks silence on being dropped from playing XI after England T20Is

இந்த நிலையில், ஜிம்பாப்வே தொடரின் முதல் டி20 போட்டிக்கு முன்பாக பிசிசிஐ இணையதளத்திற்கு பேட்டியளித்த வைபவ் சூர்யவன்ஷி, "கடந்த 4 மாதங்களில் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான், அது நடந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், நான் எனது சரியான பயிற்சியைப் பின்பற்றி, அணிக்கு எனது 100 சதவீத உழைப்பைத் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்" என்று கூறினார்.

ஜிம்பாப்வே தொடர் பற்றி பேசிய வைபவ், "இந்த ஹராரே மைதானம் எனக்கு மிகவும் சிறப்பானது. 4 மாதங்களுக்கு முன்பு தான் இங்கு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தேன். நாங்கள் சாம்பியன் பட்டமும் வென்றோம். மீண்டும் இந்த மைதானத்திற்குத் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. இங்குள்ள பிட்ச் மற்றும் மைதானத்தின் தன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். அந்த அனுபவத்தை இந்தத் தொடரில் சரியாகப் பயன்படுத்துவேன்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

"தடியடிக்கு அஞ்சமாட்டோம் ஏனென்றால்.. ".. டெல்லி போராட்டம் குறித்து ரோஹித் மனைவி ரித்திகாவின் வீடியோ

2026 ஐபிஎல் தொடரில் அசத்திய வைபவ், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனையை முறியடித்தார். ஆனால், சரியாக ரன் குவிக்காமல் 5வது போட்டியில் இருந்து நீக்கப்பட்ட போது, வைபவ் மைதானத்திலேயே கண் கலங்கியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி வைபவ் ரன் குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அபிஷேக் சர்மாவுக்கு மெகா வாய்ப்பு.. 16 ரன்கள் அடித்தால் விராட் கோலி சாதனைப் பட்டியலில் இடம்

அபிஷேக் சர்மாவுக்கு மெகா வாய்ப்பு.. 16 ரன்கள் அடித்தால் விராட் கோலி சாதனைப் பட்டியலில் இடம்
Story first published: Thursday, July 23, 2026, 11:20 [IST]
Other articles published on Jul 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+