Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி.. 16 வயதிற்குள் இந்த ரெக்கார்டை செய்த ஒரே வீரர் இவர் மட்டுமே

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 15 வயதிற்குள் இரண்டு அரைசதங்கள் விளாசிய உலகின் முதல் பேட்டர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 31 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடித்த 2வது அரைசதம் ஆகும். இதன்மூலம் 15 வயதிற்குள் 2 சர்வதேச டி20 அரைசதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை அவர் செய்தார்.

Vaibhav Suryavanshi creates world record with two T20I fifties before age of 16

முன்னதாக இங்கிலாந்து டி20 தொடரில் அறிமுகம் ஆன வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. அந்த தொடரில் மூன்று போட்டிகளில் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி ஒரு போட்டியில் கூட 20 ரன்களை தொடவில்லை. அதனால் அந்த தொடரின் கடைசிப் போட்டியில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில் அணியின் முதன்மை தொடக்க வீரராக ஆடினார். இந்த தொடரின் முதல் போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்து இருந்தார்.

அப்போது 16 வயதிற்குள் சர்வதேச அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்று இருந்தார். முன்னதாக நேபாள் அணியின் குஷால் மல்லா இந்த சாதனையை செய்து இருந்தார். இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடரின் மூன்றாவது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் அரைசதம் அடித்து 16 வயதிற்குள் இரண்டு முறை சர்வதேச அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.

சீனியர் வீரர்களை வேடிக்கை பார்க்க விட்டு அடித்த வைபவ் சூர்யவன்ஷி.. 15 ஓவர் வரை நின்று கெத்து ஆட்டம்

சீனியர் வீரர்களை வேடிக்கை பார்க்க விட்டு அடித்த வைபவ் சூர்யவன்ஷி.. 15 ஓவர் வரை நின்று கெத்து ஆட்டம்

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

Story first published: Sunday, July 26, 2026, 19:05 [IST]
Other articles published on Jul 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+