IPL 2026: 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியால் ஒரு தோல்வியை கூட தாங்க முடியல.. கண் கலங்கினார்
கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான தோல்விக்குப் பிறகு மைதானத்திலேயே கண் கலங்கினார். இந்தப் போட்டிக்குப் பின்னர் அவரது உணர்ச்சிபூர்வமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தோல்வியால் துவண்ட அவரை, எதிரணி வீரர்கள் அரவணைத்து ஆறுதல் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஏப்ரல் 20, 2026 அன்று ஈடன் கார்டனில் நடந்த போட்டியில், ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் KKR-யிடம் தோற்றது. இது ராஜஸ்தான் அணிக்கு நடப்பு சீசனில் ஏற்பட்ட இரண்டாவது தொடர் தோல்வியாகும். அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2026 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மெதுவான பிட்ச்சில் சூர்யவன்ஷி 28 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

நடப்பு சீசனில் அவரது சராசரி ஸ்ட்ரைக் ரேட் 200-க்கு மேல் இருந்தபோதும், இந்தப் போட்டியில் 164-க்கு மேல் மட்டுமே இருந்தது. ராஜஸ்தான் அணி முதல் நான்கு இடங்களுக்குள் இருந்தாலும், இந்தத் தோல்வியை வைபவ் சூர்யவன்ஷியால் தாங்கி கொள்ள முடியவிடலலை. தனிமையில் அமர்ந்திருந்த அவருக்கு, ஒரு KKR அணி பயிற்சிக்குழு உறுப்பினர் ஆறுதல் கூறினார்.
போட்டிக்குப் பிறகு, சூர்யவன்ஷியின் இந்திய அணி வாய்ப்பு குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் விக்ரம் ரத்தௌரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், " ஐந்து தேர்வாளர்கள் உள்ளனர். அவர்கள் மிகவும் திறமையானவர்கள். சரியான நேரம் வரும்போது இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. முன்கூட்டியே கணிப்பது சரியாக இருக்காது. அவரை கிரிக்கெட் விளையாட விடுங்கள். அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார்," என்று தெரிவித்தார்.
இதேவேளை, கொல்கத்தா ட்ரெஸ்ஸிங் ரூமிலும் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் இருந்ததாக வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார். "2024 ஐபிஎல் கோப்பையை வென்றபோது கூட நாங்கள் பார்க்காத கண்ணீரை இன்று இங்கு கண்டோம்," என்றார். தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயரின் வழிகாட்டுதலே இதற்கு காரணம். "ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்ட பலரும் இருந்தனர். இதுபோன்ற சமயங்களில் ஒரு வலுவான மையம் தேவை, அது எங்களிடம் உள்ளது," என அவர் விளக்கினார்.


Click it and Unblock the Notifications