IND vs ZIM: மரண அடி அடித்த வைபவ் சூர்யவன்ஷி.. கதறிய ஜிம்பாப்வே.. மின்னல் வேகத்தில் அரைசதம்
ஹராரே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில், இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரள வைக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்த போது, அதில் அவர் மட்டுமே 48 ரன்களை விளாசி அனைவரையும் வாயடைக்க வைத்தார். வெறும் 17 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து மிரட்டிய அவர், அதன் பிறகும் தொடர்ந்து அதிரடியாக ஆடி 18 பந்துகளில் அரை சதத்தைக் கடந்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானபோதிலும், 3 போட்டிகளில் விளையாடி பெரிய அளவில் ரன் குவிக்காததால் அவர் மீது சற்று ஏமாற்றம் இருந்தது.

ஜிம்பாப்வே தொடரில் சஞ்சு சாம்சன் இல்லாததால், தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடத் தொடங்கியவுடன், ஆரம்பம் முதலே வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.
முதல் ஓவரில் அபிஷேக் சர்மா சற்று நிதானம் காட்டிய நிலையில், 2வது ஓவரில் இருந்து வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரி, சிக்சர் என விளாசத் தொடங்கினார். அபிஷேக் சர்மா 8 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த போதிலும், மறுபுறம் போட்டியை தன் கையில் எடுத்துக்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி விரைவாக ரன்களைச் சேர்த்தார்.


Click it and Unblock the Notifications
