42 பந்தில் 144 ரன்கள் விளாசிய வைபவ்.. 15 சிக்சர், 11 பவுண்டரி.. 342 ஸ்ட்ரைக் ரேட்டில் வெறியாட்டம்
தோஹா: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் தொடர் கத்தார் நாட்டின் தோஹாவின் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று ஆட்டத்தில் இந்திய ஏ அணியும் யுஏஇ அணியும் பல பரிட்சை நடத்துகிறது.ஜித்தேஷ் சர்மா தலைமையிலான இந்திய ஏ அணியில் வைபவ், பிரியான்ஸ் ஆர்யா, ரமன்தீப் சிங், நெஹல் வதேரா, அஸ்டோஷ் சர்மா உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணியில் தொடக்க வீரர்களாக பிரியான்ஸ் ஆர்யாவும், 14 வயது வீரரான வைபவ் சூரியவம்ஷியும் விளையாடினர். இதில் தொடக்கம் முதலே வைபவ் சூர்யவன்ஷி, காந்தாரா படத்தில் கூலிகா சாமி வந்து ஹீரோ ஆடுவது போல் மைதானத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார்.

எதிர்கொண்ட பந்தை எல்லாம் சிக்ஸர், பவுண்டரி என்று மாற்றி மாற்றி அடித்தார் வைபவ்.இதனால், ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 17 பந்துகளில் அரை சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, தொடர்ந்து அதிரடி காட்டி 32 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.அத்துடன் நிற்காமல் தொடர்ந்து சிக்ஸர் பவுண்டரி என விரட்டிய அவர் 42 பந்துகளை எதிர் கொண்டு 144 ரன்கள் குவித்தார்.
இதில் 15 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் பிரியான்ஸ் ஆர்யா 10 ரன்களில் ஆட்டம் இழக்க, நமன் தீர் 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இந்திய ஏ அணி 13.1 ஓவரில் 200 ரன்களை கடந்து அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த போட்டிகளை சோனி லைவ் ஆப் மூலம் கண்டு களிக்கலாம்.
இந்தியா இதே வேகத்தில் ரன்களை அடித்தால் 300 ரன்கள் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடி காட்டுவதால் அவரை உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் சேர்த்து அவருடைய திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வரும் டி20 உலக கோப்பையிலே வைபவ் சூரியவன்சியை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கையை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications