For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை.. விஜய் ஹசாரே தொடரில் 36 பந்துகளில் சதம்..டிவில்லியர்ஸ் சாதனை முறியடிப்பு

மும்பை: 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, 2025-26 விஜய் ஹசாரே தொடரின் முதல் நாளில் புதிய வரலாறு படைத்துள்ளார். 14 வயது 272 நாட்களில், ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிஹார் அணிக்காக ராஞ்சியில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக விளையாடிய சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் சதத்தை வெறும் 36 பந்துகளில் பதிவு செய்தார். தனது ஏழாவது லிஸ்ட் ஏ போட்டியிலேயே இச்சாதனையை அவர் எட்டினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 59 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 64 பந்துகளில் 150 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்தார்.

Vaibhav suryavanshi

இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் இரட்டை சதத்தை மிஸ் செய்தார். இதில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் அடங்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜிம்பாப்வே அண்டர்-19 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ள சூர்யவன்ஷி, அண்மையில் யுஏஇ-யில் நடந்த அண்டர்-19 ஆசியக் கோப்பையில் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து அசத்தினார்.

இது 2002ல் அம்பத்தி ராயுடு இங்கிலாந்துக்கு எதிராகக் குவித்த 177 ரன்கள் சாதனையை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தவறவிட்டார்.இதுவரை 15 இளையோர் ஒருநாள் போட்டிகளில், சூர்யவன்ஷி 51.13 சராசரி, இரண்டு சதங்கள், மூன்று அரைசதங்கள் மற்றும் 158.79 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். கடந்த மாதம் தோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பையில், யுஏஇ-க்கு எதிராக 42 பந்துகளில் 144 ரன்கள் குவித்தார்.

32 பந்துகளில் அவர் சதம் அடித்தது, இந்தியரின் மூன்றாவது மற்றும் உலக அளவில் ஆறாவது அதிவேக டி20 சதமாகும்.சையத் முஷ்டாக் அலி டிராப்பியிலும் கொல்கத்தாவில் மகாராஷ்டிராவுக்கு எதிராக 61 பந்துகளில் 108* ரன்கள் குவித்து, இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 2025 சூர்யவன்ஷிக்கு திருப்புமுனை ஆண்டாக அமைந்துள்ளது. 13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் தேர்வானவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்து, ஐபிஎல் வரலாற்றின் இளம் சதமடித்த வீரரானார். ஏழு போட்டிகளில் 206.55 ஸ்ட்ரைக் ரேட்டில் 252 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் போட்டிக்குப் பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய இளையோர் போட்டிகளிலும் சதம் அடித்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 174.01 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 355 ரன்கள் குவித்து அசத்தினார்.ஜனவரி 15 முதல் ஜிம்பாப்வேயில் துவங்கவுள்ள அண்டர்-19 உலகக் கோப்பைக்கு முன், இந்திய அணி பெங்களூரில் பயிற்சி முகாமில் இணைகிறது. சூர்யவன்ஷி தற்போதைய விஜய் ஹசாரே டிராபியின் முதல் சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.

Story first published: Wednesday, December 24, 2025, 11:29 [IST]
Other articles published on Dec 24, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+