14 வயதான வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் சாதனை.. 78 பந்தில் சதம்.. 8 சிக்சர் .. ஆஸி U19 டெஸ்டில் சம்பவம்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 அணி மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் தொடரை இந்திய அண்டர் அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது யூத் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 243 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஸ்டீவ் ஹோகன் 92 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சு தரப்பில் தேவேந்திரன் ஐந்து விக்கெட்டுகளையும் கிஷன் குமார் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

இதனை அடுத்து இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய பேட்டிங் விளையாடியது. வழக்கம் போல் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி ஆஸ்திரேலியா பந்துவீசில் பட்டையை கிளப்பினார். பவுண்டரி சிக்சர் என அவர் அடிக்க ஆரம்பிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பதற்றம் அடைந்தனர்.
ஒரு கட்டத்தில் சிக்ஸர்களை பறக்க விட ரன்கள் புல்லட் வேகத்தில் சென்றது. இதன் மூலம் வைபவ் சூரியவன்சி 78 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேகமாக சதம் அடித்த அண்டர் 19 வீடு என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதேபோன்று 100 பந்துக்குள் அண்டர் 19 கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டு சதம் அடித்த இரண்டாவது வீரர் என்று பெருமையும் பெற்றிருக்கிறார்.
ஏற்கனவே இது ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் வைபவ் சூர்யவன்சி சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் மொத்தமாக 86 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒன்பது பவுண்டரி, எட்டு சிக்சர் என 113 ரன்கள் குவித்தார். இதேபோன்று சிஎஸ்கே வீரரும் அண்டர் 19 கேப்டனுமான ஆயுஷ் மாத்ரே 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
நடுவரிசையில் வேதாந்த் திரிவேதி 14 ரன்கள் எடுக்க இந்திய அண்டர் 19 அணி 81.3 ஓவரில் 428 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தற்போது ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு எடுத்திருக்கிறது.இது இந்திய அணி ஸ்கோரை விட 177 ரன்கள் குறைவாகும்.


Click it and Unblock the Notifications