வைபவ் சூர்யவன்ஷி இளம் வயது கிரிக்கெட் வீரர் இல்லை.. பாகிஸ்தான் வீரர்வசம் இருக்கும் சாதனை
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 15 வயது மற்றும் 99 நாட்களில் களம் இறங்கி வைபவ் சூர்யவன்ஷி இந்திய அளவில் புதிய சாதனை படைத்தார். ஆனாலும், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற உலக சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை. இந்தச் சாதனை இன்னும் பாகிஸ்தான் வீரர் ஒருவர் வசமே உள்ளது.
சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளில், மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற உலக சாதனை பாகிஸ்தானின் ஹசன் ரசாவிடம் உள்ளது. கடந்த 1996 அக்டோபரில் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்கும்போது ஹசன் ரசாவின் வயது வெறும் 14 ஆண்டுகள் மற்றும் 227 நாட்கள் மட்டுமே ஆகும்.

இதனால் வைபவ் சூர்யவன்ஷி இந்த வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளார். ஹசன் ரசா 9 ஆண்டுகளில் வெறும் 7 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி, பின்னர் ஃபார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மகளிர் கிரிக்கெட் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மிக இளைய வயதில் சர்வதேச அறிமுகம் பெற்றவரும் ஒரு பாகிஸ்தானியரே ஆவார். பாகிஸ்தான் மகளிர் அணியைச் சேர்ந்த சஜ்ஜிதா ஷா, கடந்த 2000 ஜூலை 23 அன்று அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களம் இறங்கும்போது அவரது வயது வெறும் 12 ஆண்டுகள் மற்றும் 171 நாட்கள் மட்டுமே ஆகும்.
2003-இல் ஜப்பானுக்கு எதிராக 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை இவர் பதிவு செய்துள்ளார். ஆனால், இவரும் தனது 22 வயதிலேயே (2010-இல்) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
ஐசிசி முழு உறுப்பினர் இல்லாத நாடுகளைக் கணக்கில் கொண்டால், ரோமேனியாவின் மரியான் கெராசிம் தனது 14 வயது மற்றும் 16 நாட்களில் டி20 போட்டியில் விளையாடி உலக சாதனை படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
