Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”வைபவ் சூர்யவன்ஷியை சோதிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது.. தவறவிட்டு விட்டீர்கள்”.. கவாஸ்கர் கருத்து

பெல்பாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அவரை சோதிக்க கிடைத்த ஒரு வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக சுட்டிக்காட்டி இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்து அப்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றியும் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டி ஒன்றில், "அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவார் என்று நான் பெரிதும் எதிர்பார்த்தேன். அவர் இரண்டு போட்டிகளிலும் விளையாடுவார் என்று நினைத்தேன். கடினமான சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டிற்குள் அவரை மெதுவாக கொண்டு வர இந்தத் தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.

Vaibhav Suryavanshi Missing Out on Ireland Series Debut Sunil Gavaskar Expresses Surprise

மேலும், வைபவ் சூர்யவன்ஷியை அபிஷேக் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோருடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறக்கி இந்திய அணி சோதித்திருக்கலாம் என்றும் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷியை அணியில் எடுத்தபோதிலும், இந்திய அணி நிர்வாகம் அனுபவ வீரர்களுக்கே முன்னுரிமை அளித்து அவரை பெஞ்சில் அமரவைத்தது. இதனால் 2 போட்டிகளிலும் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியைத் தழுவியது.

எனினும், வைபவ் சூர்யவன்ஷிக்கான சர்வதேச வாய்ப்பு வெகுதொலைவில் இல்லை என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "அவருக்கு நிச்சயமாக விரைவில் வாய்ப்பு கிடைக்கும். இத்தகைய திறமையான வீரர்களை நீண்ட காலத்திற்கு ஓரங்கட்ட முடியாது. அயர்லாந்து தொடரில் இல்லாவிட்டாலும், அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் அவர் நிச்சயம் விளையாட வேண்டும்" என்று கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

IND vs IRE: இந்தியாவின் தோல்வியிலும் பிரின்ஸ் யாதவ் செய்த சாதனை.. கடைசி பந்தில் செய்த சம்பவம்

IND vs IRE: இந்தியாவின் தோல்வியிலும் பிரின்ஸ் யாதவ் செய்த சாதனை.. கடைசி பந்தில் செய்த சம்பவம்

நவீன டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் வீரர்களை விரைவாக அணியில் இணைப்பது அவசியம் என்று குறிப்பிட்ட கவாஸ்கர், அடுத்த வாரம் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.

Story first published: Monday, June 29, 2026, 8:01 [IST]
Other articles published on Jun 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+