Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Vaibhav Suryavanshi: 12 சிக்சர்கள்.. 36 பந்தில் சதம்.. ஹைதராபாத் பவுலர்களை அலறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்ப்பூர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மைதானத்தின் நாலாபுறமும் 12 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை அவர் அலறவிட்ட சம்பவம் கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளது. சர்வதேச பவுலர்களை ஒரு இளம் சிறுவன் எப்படி இப்படிப் பந்தாடினார் என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள் உறைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், அதன் பின்னர் களத்தில் அரங்கேறியது யாருமே எதிர்பாராத ஒரு அசுரத்தனமான ஆட்டம்.

Vaibhav Suryavanshi s Historic 36-Ball Century vs SRH 15-Year-Old Prodigy Smashes 12 Sixes

யஷஸ்வி அவுட் ஆன பிறகு அதிரடியை இன்னும் அதிகரித்த வைபவ் சூர்யவன்ஷி, வந்த வேகத்தில் பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். அதிரடியின் உச்சகட்டமாக வெறும் 36 பந்துகளில் அவர் தனது சதத்தை பூர்த்தி செய்து மிரள வைத்தார். இது ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த சதங்களில் ஒன்றாகும். மேலும் நடப்பு சீசனில் இது அவருக்கு 2வது சதமாகும். சாகிப் உசேன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த வைபவ், மொத்தம் 37 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகள் மற்றும் 12 விண்ணை முட்டும் சிக்சர்களுடன் 103 ரன்களை குவித்து அசத்தினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 278.38 ஆக இருந்தது.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஆட்டத்திற்கு மறுமுனையில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 35 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரியான் பராக் 7 ரன்களில் வெளியேறினார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய டோனோவன் ஃபெரீரா 15 பந்துகளில் 33 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மயர் 11 ரன்களும் சேர்த்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் ரன்களை கட்டுப்படுத்த கடுமையாக திணறினர். அதிகபட்சமாக சாகிப் உசேன் 4 ஓவர்களில் 62 ரன்களை வாரி வழங்கினாலும், வைபவ்வின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். ஈஷன் மலிங்கா 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டையும், நிதிஷ் குமார் ரெட்டி 20 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்தனர். பிரபுல் ஹிங்கே 4 ஓவர்களில் 1 விக்கெட் வீழ்த்தி 49 ரன்களை வாரி வழங்கினார்.

Story first published: Saturday, April 25, 2026, 21:31 [IST]
Other articles published on Apr 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+