Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC U19 உலககோப்பை அரையிறுதி: வைபவ் சூர்யவன்ஷி மிரட்டல் ஆட்டம்.. 4 சிக்சர், 9 பவுண்டரி.. 206 ஸ்ட்ரைக்ரேட்

ஹராரே: ஐசிசி U19 உலகக் கோப்பை 2026 அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணிக்காக களமிறங்கிய 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 311 ரன்கள் இலக்கை துரத்திச் சென்ற இந்திய அணியின் தொடக்க வீரர், வைபவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.

அரையிறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி தனது மூன்றாவது அரை சதத்தை வெறும் 24 பந்துகளில் எட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர், ஆரோன் ஜார்ஜுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்தார். அப்போது ஜார்ஜ் 24 பந்துகளில் 21 ரன்களுடள் களத்தில் இருந்தார். பீகாரின் சாமஸ்திபூரைச் சேர்ந்த வைபவ் மீது பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்த நிலையில், அதை அவர் சிறப்பாகப் பூர்த்தி செய்தார்.

இருப்பினும், சூர்யவன்ஷி ஒரு சதம் அடிக்கும் வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக இழந்தார். அவர் அன்று சதம் அடித்திருந்தால், U19 உலகக் கோப்பையில் சதம் அடித்த இளம் வீரர் என்ற உலக சாதனையை முறியடித்திருப்பார். இந்த உலக சாதனை பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் வசமே உள்ளது. 2010 U19 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 15 வயது 92 நாட்களில் பாபர் 129 ரன்கள் எடுத்தார். வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது 14 வயது 314 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. U19 உலகக் கோப்பை 2026 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 264 ரன்கள் குவித்து இந்தியாவின் அதிகபட்ச ரன் அடித்த வீரராக திகழ்கிறார். இந்தத் தொடரில் அவர் மூன்று அரை சதங்களை விளாசியுள்ளார். போட்டியின் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 147.48 ஆக உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தில், அவரது ஸ்ட்ரைக் ரேட் 206.06 என பதிவானது.

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் மெஹ்பூப் கான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஃபைசல் ஷினோசாடா மற்றும் உசைருல்லா நியாசி ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.

3வது வீரராக களமிறங்கிய ஃபைசல் ஷினோசாடா 93 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். உசைருல்லா நியாசி 86 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 130 பந்துகளில் 148 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை நிர்ணயித்தது. ஒரு U19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த முதல் ஜோடி இவர்கள்தான்.

Story first published: Wednesday, February 4, 2026, 19:05 [IST]
Other articles published on Feb 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+