Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷியை ஏன் இந்திய அணியில் சேர்க்கவில்லை? காங்கிரஸ எம்பி சசி தரூர் கேள்வி

மும்பை: இந்திய கிரிக்கெட்டில் புயலாய் நுழைந்து பல்வேறு இதயங்களை வென்ற 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை எப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்துவீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை விஜய் ஹசாரே கோப்பையில் முதல் ஒருநாள் போட்டியில் 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்தார். இதில் 15 சிக்சர்கள் அடங்கும். இந்த போட்டியில் 36 பந்துகளில் சதம் விளாசிய அவர் ஏற்கனவே நடப்பாண்டில் பல்வேறு போட்டிகளில் சதம் அடித்துள்ளார்.

Vaibhav Suryavanshi

டி20, டெஸ்ட், ஒரு நாள் என மூன்று விதமான அண்டர் 19 கிரிக்கெட் போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி பட்டையை கிளப்பி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சர்வதேச வீரர்கள் அடங்கிய ஐபிஎல் போட்டிகளிலும் சதம் அடித்திருக்கின்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி சசிதரூர், கடந்த முறை 14 வயது இளம் வீரர் இது போல் கிரிக்கெட் திறமையை காட்டினார்.

அது தான் சச்சின் டெண்டுல்கர். அவர் எவ்வளவு பெரிய உயரத்தை தொட்டார். எவ்வளவு பெரிய வீரராக மாறினார் என்று நாம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும்போது வைபவ் சூர்யவன்ஷியை மட்டும் எதற்கு இந்திய அணியில் சேர்க்காமல் காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று பதிவிட்டுள்ள சசிதரூர், அகர்கர், கம்பீர், சச்சின் மற்றும் பிசிசிஐயை டேக் செய்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியை அதிரடி காட்டி வந்தாலும், அவருக்கு களத்தில் பொறுமையாக ஆடும் பழக்கம் இன்னும் இல்லை. டி20 கிரிக்கெட் வேண்டுமானால் இந்த அதிரடி பயன்படும். ஆனால் ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் பண்ட்க்கு ஏற்றவாறு அதிரடி காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

இதனால், வைபவ் சூரியவன்சி இன்னும் சில காலம் ரஞ்சி மற்றும் மற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அதன்பின் இந்திய சீனியர் அணிக்கு வருவது தான் சரியான விஷயமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்தனர். வரும் ஜனவரி மாதம் அண்டர் 19 உலகக்கோப்பை ஜிம்பாபேவில் நடைபெறுகிறது. இதில் வைபவ் சூரியவன்சி பெரிய அணிகளுக்கு எதிராக சதம் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 25, 2025, 10:03 [IST]
Other articles published on Dec 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+