Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்சி: பும்ராவின் முதல் பந்திலேயே சிக்சர் விளாசிய 15 வயது வீரர்! மிரண்டு போன மும்பை

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் உலகின் தலைசிறந்த டி20 பவுலரான பும்ராவை எதிர்கொண்ட முதல் பந்தலிலேயே 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி சிக்சர் விளாசி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், மும்பை அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி உடன் இந்த போட்டியில் விளையாடுகிறது.

கவுஹாத்தியில் மழை காரணமாக ஆட்டம் பதினொரு ஓவராக குறைக்கப்பட்டது. பவர் பிளே மூன்று புள்ளி இரண்டு ஓவர்களாகவும், ஒரு பவுலர் மட்டும் அதிகபட்சமாக மூன்று ஓவர்களும் மற்ற நான்கு பவுலர்கள் அதிகபட்சமாக தலா இரண்டு ஓவர்களும் வீசலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் ஓவரில் தீபக்சாகர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வீச அதனை ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர்களை விளாசினார். இதனால் முதல் ஓவரில் 22 ரன்கள் ராஜஸ்தான் அணி குவித்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தை உலகின் தலைசிறந்த பவுலரான பும்ரா வீசினார்.

பும்ராவை 15 வயது வீரரான சூரியவன்ஷி எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் திறமை அவருக்கு இருக்கிறதா என்று பல கேள்விகளும், இவ்விருவருக்கும் இடையிலான போட்டி எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் முதல் பந்திலேயே சூரியவன்சி இமாலய சிக்சர் விளாசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தார். எப்படி கில்லி படத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்னே முத்துப்பாண்டியை அடிச்சு சாச்சிட்டானே! யாருடா இவன்? என்று கேட்பார்களே! அதுபோல் வைபவ் சூரியவன்ஷி பும்ரா என்ற ஜாம்பவானை முதல் பந்திலே அடித்து நொறுக்கினார்.

அது மட்டும் இல்லாமல் அந்த ஓவரின் நான்காவது பந்தையும் பும்ரா ஷார்ட் பாலாக வீச அதையும் பளார் என்று 79 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்து அசத்தினார். தமது பந்துவீச்சை 15 வயது சிறுவர் இப்படி அடிப்பார் என்று பும்ராவே எதிர்பார்க்கவில்லை. இதனால் 2.4 ஓவரிலே ராஜஸ்தான் 50 ரன்களை கடந்தது.

Story first published: Tuesday, April 7, 2026, 22:41 [IST]
Other articles published on Apr 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+