Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் மனைவி முதல் தமன்னா வரை.. விராட் கோலி மீதான 5 காதல் சர்ச்சைகள்.. சாக்லெட் பாய் செய்தது என்ன?

சென்னை: காதலர் தினமான இன்று இந்திய கிரிக்கெட்டின் சாக்லெட் பாயாக விளங்கிய விராட் கோலியின், காதல் சர்ச்சைகள் நினைவுக்கூறப்பட்டு வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.

ஆனால் அனுஷ்கா சர்மாவை காதலிப்பதற்கு முன்னாள் 5 பிரபலங்களுடன் விராட் கோலி காதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆதராத்துடன் சிலவகை உறுதியானது.

தமன்னா

தமன்னா

விராட் கோலி இந்திய அணியில் பிரபலமடைந்து வந்த போது பிரபல திரைப்பட நடிகை தமன்னா பாட்டியாவுடன் சிறிது காலம் டேட்டிங் செய்து வந்ததுள்ளார். இருவரும் கடந்த 2012ம் ஆண்டு செல்போன் விளம்பரத்தில் சேர்ந்து நடித்த போது காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இசபெல்லா லெய்டீ என்ற நடிகை குறுக்கே வந்ததால் அவர்களின் காதல் முடிவுக்கு வந்தது.

2 வருட காதல்

2 வருட காதல்

பிரேசில் நாட்டை சேர்ந்த மாடலும், பாலிவுட் நடிகையுமான இசபெல்லா லெய்டீயும் 2 வருடங்களுக்கும் மேல் காதல் உறவில் இருந்துள்ளனர். இதனை இசபெல்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். விராட் கோலியும் சமூக வலைதளத்தில் "te amo" ( நான் உன்னை காதலிக்கிறேன்) என ஸ்பானிஷ் மொழியில் பதிவிட்டிருந்தார். ஆனால் இது திருமணம் வரை செல்லவில்லை.

நடிகை சஞ்சனா

நடிகை சஞ்சனா

தமன்னாவுடன் டேட்டிங் செய்வதற்கு முன்னதாகவே கன்னட நடிகை சஞ்சனாவுடன், விராட் கோலி காதல் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. அவர் அவ்வபோது சஞ்சனாவுடன் டென்னிஸ் விளையாடுவது, காரில் இருவரும் நீண்ட தூரத்திற்கு பயணிப்பது என்று இருந்துள்ளனர். எனினும் காதல் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை.

மிஸ் இந்தியா அழகி

மிஸ் இந்தியா அழகி

கடந்த 2010 - 2011 காலக்கட்டத்தில் விராட் கோலியும் (2007ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற மாடல் அழகி சாரா ஜேன் டியாஸுடன் காதல் வயப்பட்டிருந்தார் என கூறப்பட்டது. 2011 உலகக்கோப்பையின் போது கூட கோலி அவரை உற்சாகப்படுத்த அழைத்திருந்துள்ளார். ஆனால் சில முக்கிய பணிகளில் ஒப்பந்தம் ஆனதால் சாராவால் செல்ல முடியவில்லை. இதனால் உலகக்கோப்பை தொடருடன் அவர்களின் உறவு முறிந்ததாக தகவல் வெளியாகின.

ரித்திகா

ரித்திகா

இந்த பட்டியலில், மிகப்பெரிய சர்ச்சை கிளப்பியது விராட் கோலி - ரித்திகா சஜ்தே ஆகியோரின் டேட்டிங் விவகாரம் தான். ஏனென்றால் ரோகித் சர்மாவின் மனைவி தான் ரித்திகா. விராட் கோலியும் - ரித்திகாவும் 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சந்தித்துள்ளனர். அதன் பின்னர் 3 ஆண்டுகளாக விராட் கோலியிடம் மேலாளராக ரித்திகா பணிபுரிந்துள்ளார். 2013ம் ஆண்டு இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதற்கேற்றார் போல இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியாக திரைப்படத்திற்கு சென்றுவிட்டு, வெளியே வரும் போது பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது ரித்திகா தனது முகத்தை மூடிக்கொண்டு உடனடியாக ஓடிவிட்டார். இந்த சர்ச்சைகளுக்கு பிறகு தான் ரோகித் சர்மாவை ரித்திக்கா சந்தித்து காதல் மலர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 14, 2022, 19:56 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+