Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதலிக்காக தலைமுடியை வெட்டிய தோனி.. அஷின் முதல் தீபிகா வரை.. தோனியின் டாப் 4 காதலிகள்..

சென்னை : உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், நமக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களின் காதல் வாழ்க்கையை நாம் பார்த்து வருகிறோம்.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை தற்போதைய 2K கிட்ஸ் காட்பாதர் போல் பார்த்து வருகின்றனர்.

ஆனால், அதற்கு முன்னாள் பிறந்தவசர்களுக்கு தான் தோனி எவ்வளவு பெரிய காதல் மன்னன் என்று தெரியும்.

ராய் லட்சுமி

ராய் லட்சுமி

தோனியின் காதலிகளில் மிக முக்கியமானவர் தமிழ் நடிகை ராய் லட்சுமி, சிஎஸ்கேவுக்காக தோனி ஆடத் தொடங்கிய போது ராய் லட்சுமிக்கும், தோனிக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. சென்னைக்கு தோனி வந்தால் ராய் லட்சுமி இல்லாமல் தோனியை தனியாக பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருந்தனர். ஆனால் என்ன காரணமோ, அவர்கள் காதல் பிரிந்தது.

அஷின்

அஷின்

தமிழ் திரைப்பட நடிகை அஷினும், தோனியும் உயிருக்கு உயிராக காதலித்ததாக செய்திகள் வெளியாகின,. இந்தி கஜினிக்கு பிறகு அஷின் தேசிய அளவில் பிரபலமான போது தோனிக்கும், அசினுக்கும் காதல் மலர்ந்தது. அவ்வளவு ஏன், அஷின் வீட்டுக்கு அவர்கள் பெற்றோர்கள் இருக்கும் போது தோனி அடிக்கடி விசிட் அடித்து நல்ல ஒரு உறவை பேணி வந்தார். ஆனால் என்ன நடந்ததோ அந்த காதலும் கைக்கூடவில்லை.

தீபிகா

தீபிகா

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அப்போது தான் ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்து வந்தார். தோனி எதிர்ச்சையாக தீபிகாவை செட்டில் பார்த்த போது இருவருக்கும் காதல் தீ பற்றி கொண்டது. தீபிகா சொன்னதால் தான் தாம் ஆசை ஆசையாக வளர்த்து வந்த தலைமுடியை நீக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆனால் தீபிகாவோ தோனிக்கு அதிர்ச்சி அளித்துவிட்டு சென்றுவிட்டார்.

ஷாக்சி

ஷாக்சி

எத்தனை பெண்களை கடந்திருப்பேன், இப்படி என் மனம் துடித்தது இல்லை என்ற பாடல் வரிக்கு ஏற்றார் போல், பல காதலிகளை தோனி கடந்து வந்தாலும் அவரது இதயத்தை தட்டி பறித்தவர் ஷாக்சி தோனி தான். ஷாக்சியின் தனித்துவத்தை பார்த்து தனது இதயத்தை பறிகொடுத்த தோனி, இன்று தன் வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Story first published: Monday, February 14, 2022, 22:04 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+