Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வருண் சக்கரவர்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டி அணியில் இருந்து நீக்கம்.. மாற்று வீரராக விப்ரஜ் தேர்வு

மும்பை: ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி புறப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக தொடரிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக 21 வயது இளம் ஆல்-ரவுண்டர் விப்ராஜ் நிகம் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் வரும் செப்டம்பர் 19 அன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் தொடங்குகின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி நேரடியாக காலிறுதியில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக செப்டம்பர் 22 அன்று ஜப்பான் அணிக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு டி20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது.

டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீசிய போது, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு விலா பகுதியில் தசைநார் காயம் ஏற்பட்டது. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய கூடுதல் காலம் தேவைப்படும் என்பதால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Varun Chakaravarthy Out of Asian Games 2026 Due to Injury Vipraj Nigam Named Replacement

சீனியர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இம்மாத இறுதியில் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளதால், வருணுக்கு பதிலாக இளம் லெக்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் விப்ராஜ் நிகமிற்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் விப்ராஜ் நிகம், இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், பேட்டிங்கில் 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கீழ் வரிசையில் அதிரடியாக ரன் குவிக்கும் ஆற்றல் கொண்டவர். முதன்முறையாக சர்வதேச இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விப்ராஜ் நிகமிற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

"கடைசி நேரத்தில் கை வைக்காதீங்க".. கம்பீருக்கு யுவராஜ் சிங் எச்சரிக்கை.. 2027 உலகக் கோப்பை திட்டம்

தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி ஆட மாட்டார் என பிசிசிஐ முன்பே அறிவித்து இருந்தது. அவர் அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Also Read

"2 ஆசிய கோப்பைகளும் மும்பைக்கு வரும்".. பாகிஸ்தான் அமைச்சருக்கு பிசிசிஐ செயலாளர் விடுத்த எச்சரிக்கை

"2 ஆசிய கோப்பைகளும் மும்பைக்கு வரும்".. பாகிஸ்தான் அமைச்சருக்கு பிசிசிஐ செயலாளர் விடுத்த எச்சரிக்கை

Story first published: Wednesday, September 16, 2026, 15:07 [IST]
Other articles published on Sep 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+