For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஓவரில் தமிழக வீரர் வருண்சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு.. ஐதராபாத்துக்கு ஷாக் கொடுத்த KKR

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் 47வது லீக் போட்டியில் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இருந்த கொல்கத்தா அணி , ஐதராபாத் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் டேவிட் வீசா நீக்கப்பட்டு ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் வழக்கம் போல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் வெளியேறினார்.

Varun chakravarthi superb last over made KKR beat srh by 5 runs

ஜேசன் ராய் 20 ரன்களில் வெளியேற, கொல்கத்தா அணி 4.4 ஓவர்களில் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இந்த நிலையில் கேப்டன் நிதிஷ் ராணா - ரிங்கு சிங் இணை சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டது. நிதிஷ் ராணா 31 பந்தில் 42 ரன்கள் சேர்க்க, இதில் 3 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.

இதே போன்று சிறப்பாக விளையடிய ரிங்கு சிங் 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இறுதியில் ரஸில் 2 சிக்சர் விளாசி 24 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே சேர்த்தது.172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

அபிஷேக் சர்மா 9 ரன்களிலும், மாயங் அகர்வால் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்க்க,முக்கிய கட்டத்தில் பெவிலியன் திரும்பினார். ஐதராபாத் அணியின் 13 கோடி ரூபாய் வீரர் ஹாரி புருக் டக் அவுட்டாக ஐதராபாத் அணியும் தடுமாறியது.

Varun chakravarthi superb last over made KKR beat srh by 5 runs

இதனையடுத்து கேப்டன் ஏய்டன் மார்க்கரம் மற்றும் கிளாசன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதனால் ஐதராபாத் அணியின் வெற்றி எளிதாக இருந்தது. ஆனால் கிளாசென் 20 பந்துகளில் 36 ரன்கள் விளாசி ய நிலையில் ஆட்டமிழக்க, பொறுமையாக விளையாடிய ஏய்டன் மார்க்கரம் 40 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து அவரும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால், கொல்கத்தா அணியும் மீண்டும் ஆட்டத்திற்குள் நழைந்தது. கடைசி பந்தில் ஐதராபாத் அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி கடைசி ஓவரிலும் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட அது டாட் பாலாக அமைந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே வருண்சக்ரவர்த்தி கொடுத்து அசத்தினார்.

Story first published: Thursday, May 4, 2023, 23:36 [IST]
Other articles published on May 4, 2023
English summary
Varun chakravarthi superb last over made KKR beat srh by 5 runs கடைசி ஓவரில் தமிழக வீரர் வருண்சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு.. ஐதராபாத்துக்கு ஷாக் கொடுத்த KKR
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+