Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் இல்ல.. இவங்க 2 பேர் தான் என்னுடைய கம்பேக்கிற்கு காரணம்.. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தன்னுடைய 33 வது வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார். கடந்த 2021 டி20 உலக கோப்பையில் விளையாடிய அவர் மோசமாக செயல்பட்டதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின் மூன்று ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக கடுமையாக போராடினார். அதன் பின் 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஆண்டு டி20 தொடர் மூலம் இந்திய அணிக்கு வருண் சக்கரவர்த்தி கம்பேக் கொடுத்தார்.

Varun chakravarthy

அதிலிருந்து இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறிய வருண் சக்கரவர்த்தி, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சாம்பியன்ஸ் கோப்பையிலும் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். தனது கம்பேக் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என்னுடைய வெற்றிக்கு சூரிய குமாரும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருமே காரணம்.

என்னுடைய கம்பேக் பயணத்தில் அவர்கள் இருவரும் மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறார்கள். ஏனென்றால் நான் வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். வங்கதேச தொடருக்கு முன்பே சூரியகுமார் என்னை தொடர்பு கொண்டு நான் உன்னை கவனித்துக் கொண்டிருக்கின்றேன். உன்னை அணியில் தேர்வு செய்ய விருப்பம் காட்டு வேன்.

ஆனால் தேர்வு குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்று என்னால் சரியாக சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய அணியில் நீ இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று என்னிடம் கூறினார். இதைப் போன்று பயிற்சியாளர் கம்பீரும், என்னுடைய கம்பபேக்கிற்கு உதவினார். அவர் என்னை தொடர்பு கொண்டு ஊக்கம் அளித்தார்.

எப்போது பேசினாலும் எனக்கு அவர் நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசுவார். அவர் எப்போதுமே என்னிடம் சொல்வது, இது ஒன்றுதான்.உன்னை யார் நிராகரிக்கிறார்களோ அதை பற்றி எனக்கு கவலை இல்லை. என்னுடைய திட்டத்தின் நீ இருக்கின்றாய் என்று கூறினார். அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.

பயிற்சியாளர் கம்பீர் ஒரு போர்வீரர்க்கான மன உறுதி கொண்டவர். கொல்கத்தா அணியில் இருந்த போதும் சரி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சரி அவருடைய இந்த மன உறுதி தான் எங்களை வெற்றி பெற வைத்தது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணியின் கம் பேக்கை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, August 18, 2025, 17:41 [IST]
Other articles published on Aug 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+