நீண்ட நாள் காதலியுடன் திருமணம்.. செம சர்ப்ரைஸ் தந்த தமிழக கிரிக்கெட் வீரர்!!
சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தன் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்தார்.
வருண் சக்கரவர்த்திக்கு 2020 சிறப்பாக அமைந்தது. கிரிக்கெட்டில் பெரிய முன்னேற்றத்தை சந்தித்த அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது அவர் தன் காதலியை திருமணம் செய்து உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மிஸ்டரி ஸ்பின்னர்
வருண் சக்கரவர்த்தி தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர். அவரது மிஸ்டரி ஸ்பின் பந்துவீச்சின் காரணமாக டிஎன்பிஎல் தொடரில் முக்கிய வீரராக வலம் வந்த அவர் 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 8.4 கோடிக்கு வாங்கப்பட்டார்.

சிறப்பான ஆட்டம்
அந்த சீசனில் அவர் ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். அடுத்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 4 கோடிக்கு வாங்கியது. இந்த சீசனில் அவர் சிறப்பாக பந்துவீசி கொல்கத்தா அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்தார்.

இந்திய அணியில்..
ஐபிஎல் தொடரின் முடிவில் அவர் இந்திய டி20 அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். எனினும், காயம் காரணமாக அவர் பின்னர் நீக்கப்பட்டார். இந்த நிலையில், இந்தியா திரும்பிய அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நேஹா கடேகரை கை பிடித்தார்
வருண் தன் நீண்ட நாள் காதலியான நேஹா கடேகரை கை பிடித்தார். வீட்டிலேயே நடந்த எளிமையான திருமணத்தில் அவரது நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

பிரிய வேண்டிய நிர்பந்தம்
லாக்டவுன் சமயத்தில் இந்த காதல் ஜோடி பிரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தீவிர லாக்டவுன் இருந்த இடத்தில் சிக்கினார் வருண் சக்கரவர்த்தி. நேஹா மும்பையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்பின்றி பல மாதங்கள் தவித்துள்ளனர்.

ஏற்பாடு
அதன் பின் ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்று விட்டார் வருண். இந்த நிலையில், நாடு திரும்பிய அவருக்கு விரைவாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது.

கிரிக்கெட் வீடியோ
வரவேற்பின் போது வருண் சக்கரவர்த்தி - நேஹா கிரிக்கெட் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வருண் பவுலிங் செய்ய, நேஹா பேட்டிங் செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு புது தம்பதியை வாழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications