வருண் சக்கரவர்த்தி- கம்பேக் னா இப்படி இருக்கனும்? கிடுகிடுவென உயர்ந்த சொத்து மதிப்பு, கார் விவரம்
மும்பை : தமிழக கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக், அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோருக்கு பிறகு தற்போது இந்திய கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி கோலொச்சி வருகிறார். 33 வயதான வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.
இதில் அவர் விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்களும் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளும் என வரும் சக்கரவர்த்தி பட்டையை கிளப்பி வருகிறார்.இதுவரை இந்திய அணிக்காக 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

வருண் சக்கரவர்த்தி முதல் முதலாக ஐபிஎல் தொடரில் 2019 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அதில் ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாடினார். அதன் பிறகு கே கே ஆர் அணியின் நட்சத்திர வீரராக வருண் சக்கரவர்த்தி உயர்ந்தார். இதுவரை 71 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள வருண் சக்கரவர்த்தி 83 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி தற்போது சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி என்ன கார் வைத்திருக்கிறார், அவருடைய சொத்து மதிப்பு என்ன என்பதை தற்போது பார்க்கலாம். வருண் சக்கரவர்த்தி லோகோ மற்றும் ஏசிக்ஸ் ஆகிய நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்.
இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு தனியாக ஊதியம் கிடைக்கின்றது. அது மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சத்திற்கு மேல் பாலோர்சை வைத்திருக்கிறார். இதன் மூலமும் சிறுத்தொகை வருண் சக்கரவர்த்திக்கு கிடைக்கும். வருண் சக்கரவர்த்தியின் மிகப்பெரிய ஊதியமே ஐபிஎல் தொடரிலிருந்து தான் கிடைக்கின்றது.
வரும் 2025 ஆம் ஆண்டு சீசனில் கேகேஆர் அணி இவரை 12 கோடி ரூபாய் மட்டும் சம்பளமாக வழங்கும். வருண் சக்கரவர்த்திக்கு இரண்டு சொகுசு கார்கள் இருக்கின்றது. Audi q3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய சொகுசு கார்களை வருசக்கரவர்த்தி வைத்திருக்கிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் வருண் சக்கரவர்த்தியின் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் வரை இருந்தது. தற்போது டி20 கிரிக்கெட்டில் நிரந்தர வீரராக இருப்பதால் அவருக்கு பி சி சி ஐயின் ஒப்பந்தமும் இந்த ஆண்டு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவருடைய சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications