நீங்கதான் பவுலிங்.. நடராஜன் மட்டுமல்ல இங்கிலாந்து தொடரில் இணையும் இன்னொரு தமிழக வீரர்.. செம டிவிஸ்ட்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இணைய உள்ளார். டி 20 அணியில் இன்னும் 2 தமிழக வீரர்கள் ஆட உள்ளனர்.
இங்கிலாந்து இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது. இதற்கு பின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள், டி 20 தொடர் முழுக்க அகமதாபாத்தில் நடக்க உள்ளது.
அதன்பின் புனேவில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த டி 20 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னை
இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இணைய உள்ளார். இதற்கான அழைப்பு ஏற்கனவே நடராஜனுக்கு சென்று உள்ளது. இவர் விஜய் ஹசாரே கோப்பையில் ஆடுவதற்காக சென்னையில் இருந்தார். அப்போதுதான் இந்த அழைப்பு சென்றது.

அழைப்பு
விஜய் ஹசாரே அணியில் இருந்து இவரை விடுவிக்கும்படி அழைப்பு சென்று இருக்கிறது. இதனால் நடராஜன் பெங்களூர் செல்ல இருக்கிறார். இந்த நிலையில் டி 20 அணியில் இன்னும் 2 தமிழக வீரர்கள் ஆட உள்ளனர். டி 20 அணியில் தமிழக வீரர்கள் அதிக அளவில் இடம்பெற வாய்ப்புள்ளது.

வாய்ப்பு
அதன்படி வாஷிங்க்டன் சுந்தர் கண்டிப்பாக டி 20 அணியில் இருப்பார்.இவர் போக மாற்று ஸ்பின் பவுலராக வருண் சக்ரவர்த்தி பெங்களூர் சென்று இருக்கிறார். வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் இணைவதற்காக தற்போது பெங்களூரில் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

பயிற்சி
இவர் பெரும்பாலும் டி 20 அணியில் மட்டுமே இடம்பெறுவார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இவர் சிறப்பாக பவுலிங் செய்தார். இவரின் ஸ்பின் பவுலிங் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பந்து கடைசி நொடியில் எங்கே திரும்பும் என்றே கணிக்க முடியாது.

கணிப்பு
இதன் காரணமாக இவர் மிஸ்டரி ஸ்பின் பவுலர் என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஐபிஎல்லில் சிறப்பாக பவுலிங் செய்த காரணத்தால் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வானார். ஆனால் காயம் காரணமாக இதில் கலந்து கொள்ள முடியவில்லை.

திருமணம்
அதன்பின் இவருக்கு திருமணம் ஆனதால் சையது முஷ்டாக் அலி கோப்பையில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது இந்திய அணியுடன் இவர் இணைவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications