மொட்டை மாடி பவுலர்.. கார்டன் பேட்ஸ்வுமன்.. பெட்ரூமில் பாய்ந்து பிடித்த கேட்ச்.. 2 குட்டி ஆடியன்ஸ்
பெங்களூர்: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி வீடியோ கால் மூலமாக ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி அசர வைத்துள்ளார்.
கொரோனாவைரஸ் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே போவதால் இந்தியாவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் அறிவித்துள்ளார்.
இதனால் ஐபிஎல் போட்டிகளும் கூட தள்ளிப் போயுள்ளன. ஆனாலும் கிரிக்கெட் ஆடிய கால்கள் சும்மா இருக்குமா அல்லது இருக்கத்தான் முடியுமா. பேட்டும் கையுமாக ஒரு குரூப்பாக கிளம்பி விட்டனர்.. வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் ஆட.

வேதா வீட்டு மொட்டைமாடி
இந்திய மகளிர் அணியின் ராக்ஸ்டார் என்று சொல்லப்படுபவர் வேதா கிருஷ்ணமூர்த்தி. கிரிக்கெட் மட்டுமல்ல நல்லா பாடுவார், டான்ஸ் ஆடுவார். பல்வேறு திறமைகளைக் கொண்டவர் வேதா. இவர்தான் இப்போது வித்தியாசமான கிரிக்கெட் ஆடியுள்ளார். அதாவது பல்வேறு இடங்களில் ஒன்று கூடி கிரிக்கெட் போட்டியை நடத்தி அசத்தியுள்ளார் வேதா கிருஷ்ணமூர்த்தி.

ஐசிசின்னே போட்டிக்குப் பெயர்
இந்த கிரிக்கெட்டுக்குப் போயர் "ஐசொலேஷன் கிரிக்கெட் கப்" போட்டியாம். இதில் கலந்து கொண்டவர்கள் வேதா கிருஷ்ணமூர்த்தி, பிற கிரிக்கெட் வீராங்கனைகளான மோனா மேஷாராம், அகன்ஷா கோலி, ரீமா மல்ஹோத்ரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீராங்கனை, கமெண்ட்டேட்டர் லிசா ஸ்தலேகர், அப்புறம் இரண்டு குட்டிச் சிறுமிகள் (இவர்கள்தான் ரசிகர்களாம்). பிறகு அம்பயர் வேடத்தில் அனுஜ் மல்ஹோத்ரா.

பெட்ரூமில் பீல்டர்.. ஹாலில் ஆடியன்ஸ்
இத்தனை பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு மொட்டை மாடியில் நின்று கொண்டனர். பெட்ரூமில் பீல்டரை நிறுத்திருக்காங்க. பிறகு வீட்டு ஹாலில் உள்ள சோபாவில் ரசிகர்கள் இருவரும் உட்கார்ந்துள்ளனர். ரீமாதான் பந்து வீசுகிறார். வேதா பேட் செய்கிறார். விக்கெட் கீப்பிங் அகன்ஷா கோலி.. லிசா கமெண்டரி கொடுக்கிறார். சூப்பராக இருக்கிறது கமெண்டரி.
இதுல முறைப்பு வேற
ரீமா முதலில் பந்து வீச வரும்போது.. ஸ்டாப் என்று கையைக் காட்டி சிக்னல் தருகிறார் வேதா.. இதனால் கடுப்பான ரீமா அப்படியே லுக் விட்டு வேதாவை முறைக்கிறார். அம்பயர் வந்து கூல் கூல் என்று சமாதானம் செய்கிறார். பிறகு பந்து வீசுகிறார். வேதா அதை அடிக்க பந்து பெட்ரூமுக்குள் ஓடுகிறது.. அதை படுக்கையில் பாய்ந்து கேட்ச் செய்கிறார் மோனா.. இதைப் பார்த்து இரண்டு ரசிகர்களும் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். இப்படிப் போகிறது இந்த கிரிக்கெட்.

லிசாவுக்கு தாங்க முடியலை
இப்படி ஒரு கிரிக்கெட் ஐடியா யாருடைய மூளையில் உதித்தது என்று தெரியவில்லை. ஆனால் கமெண்டரி கொடுத்த லிசா இப்படி ஒரு மேட்ச்சை நான் பார்த்ததே இல்லை.. அதுக்கு கமெண்டரி கொடுத்தது செம வேடிக்கையாக இருந்தது.. அடுத்தடுத்து போட்டிகள் நடத்துவீங்களா என்று கேட்டு கலாய்த்துள்ளார் வேதா அன் கோவை.. உண்மையிலேயே செம ஜாலியான கிரிக்கெட்தான்.. என்ன ரொம்ப ஸ்லோவாக மேட்ச் போகிறது.


Click it and Unblock the Notifications