Women’s T20 Challenge:3 விக். வித்தியாசத்தில் டிரெய்ல்ப்ளேசர்சை வீழ்த்திய மிதாலி ராஜின் வெலாசிட்டி
ஜெய்பூர்:மகளிர் டி-20 சேலஞ்ச் தொடரில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணி அபாரமாக வெற்றி பெற்றது.
ஆடவருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று, மகளிருக்கும் நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, மகளிர் டி-20 சேலஞ்ச் என்ற பெயரில் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 3 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன.

ஜெய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும், ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரெய்ல் ப்ளேசர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த டிரெய்ல் ப்ளேசர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, 20 வயதேயான இளம் வீராங்கனை ஹெர்லின் டியோல் 40 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக துவக்க வீராங்கனை பெயேட் 26 ரன்கள் எடுத்தார்.
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய வெலாசிட்டி அணி, 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிக பட்சமாக, இங்கிலாந்தின் டேனியல் வயட் 46 ரன்களும், இந்தியாவின் ஷபாலி வெர்மா 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் மிதாலி ராஜ் 17 ரன்கள் எடுத்தார். வெலாசிட்டி அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாளை நடைபெற உள்ள 3வது போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும், மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும் மோதுகின்றன. 3 போட்டிகளின் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிக்கு போட்டியில் களம் காணும்.


Click it and Unblock the Notifications