Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மலிங்காவின் சுருள் முடி வேணுமா, கெய்ல் சடை வேணுமா.. ஹோலிக்காக கூவி, கூவி விற்பனை!

டெல்லி: ஹோலி பண்டிகை வரும் 6ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. ஹோலியை வட இந்தியாவில், கடந்த ஒரு வாரமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் நடக்கின்றன. வண்ணப் பொடிகளை மக்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்போது உலக கோப்பை கிரிக்கெட் சீசன் அல்லவா.. எனவே, அதை வைத்தும் கோலாகலம் கூடியுள்ளது ஹோலி பண்டிகை கொண்டாட்டக்காரர்களுக்கு. கிரிக்கெட் வீரர்கள் மலிங்கா, கிறிஸ்கெய்ல் ஹேர் ஸ்டைல்கள் உலக பிரசித்தம் என்பதால் அதுபோன்ற விக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

கெய்ல் வேணுமா, மலிங்கா வேணுமா

கெய்ல் வேணுமா, மலிங்கா வேணுமா

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் தெருவோர கடைக்காரர் ஒருவர் வைத்துள்ள கிறிஸ்கெய்ல், மலிங்கா விக்குகளை பாருங்கள், இதை அணிந்து கொண்டு மனதுக்கு பிடித்தமானவர்களுக்கு கலர் பூசுவதும் ஒரு மகிழ்ச்சிதான்.

நடிகை நாட்டியம்

நடிகை நாட்டியம்

மும்பையில் நடந்த கலர்ஃபுல் விழாவில் நடனமாடிய பாலிவுட் நடிகை எல்லி அவ்ரம். சூப்பரா இருக்கிறதா?

கிருஷ்ண பக்தர்கள்

கிருஷ்ண பக்தர்கள்

ஜெய்ப்பூரில் ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு கலக்கல் நடனமாடிய பக்தர்கள்.

மாணவிகள் ரங்கோலி

மாணவிகள் ரங்கோலி

கொல்கத்தா ரவீந்திரபாரதி பல்கலைக்கழக மாணவிகள், தங்களது வருங்காலம் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்பதை இப்படி சிம்பாலிக்காக உணர்த்துகிறார்களோ..

கண்ணன் பிறந்த மண்

கண்ணன் பிறந்த மண்

கண்ண பெருமான் பிறந்த விருந்தாவனத்திலுள்ள பேன்கி பிகாரி கோயிலில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தை பாருங்கள்.

காசியில் சாமியார்கள் கொண்டாட்டம்

காசியில் சாமியார்கள் கொண்டாட்டம்

வாரணாசியின், மன்னிகார்னிக் காட் பகுதியில் தங்களுக்கே உரித்தான பாணியில் ஹோலி கொண்டாடிய பக்தர்கள், சாமியார்கள்.

ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம்

ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம்

லக்னோவிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள குழந்தைகளும், ஹோலியை முன்னிட்டு தங்கள் கவலைகளை மறந்து கலர் பூசி மகிழ்ந்தனர்

Story first published: Tuesday, March 3, 2015, 12:58 [IST]
Other articles published on Mar 3, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+