Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பீல்டிங் நிக்கறதே சரியில்லை.. அப்புறம் எப்படி மத்தவங்களை சரியா பீல்டிங் நிற்க வைப்பார்?

மும்பை : இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பீல்டிங் நிற்கும் இடத்தை மாற்றிக் கொண்டால்தான் அணியை கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் வீரர் திலீப் வெங்க்சர்க்கார் கூறினார்.

ஒருநாள் போட்டிகளில் கோலி பல சமயம் பவுண்டரி எல்லை அருகே நின்று பீல்டிங் செய்கிறார். இதை ஏற்கனவே, பலரும் விமர்சித்துள்ளனர்.

உள்வட்டம்

உள்வட்டம்

காரணம், கேப்டன் எப்போதும் உள்வட்டத்துக்குள் பீல்டிங் செய்தால் மட்டுமே மற்ற வீரர்களை பீல்டிங் நிறுத்தவும், பந்துவீச்சாளருடன் ஆலோசனை செய்யவும் உதவியாக இருக்கும். ஆனால், கோலி இதை செய்வதில்லை.

தோனிதான் எல்லாம்

தோனிதான் எல்லாம்

ஆனால், இந்திய அணியில் கோலி பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் நிற்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் தோனி. பல சமயம் பந்துவீச்சாளருடன் ஆலோசனை செய்வது, பந்துவீச்சுக்கு ஏற்ப பீல்டிங் நிற்க வைப்பது என பலவற்றையும் செய்வது தோனி தான்.

திணறினார் கோலி

திணறினார் கோலி

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது அன்றும் 5வது ஒருநாள் போட்டியில் தோனி ஆடவில்லை. அந்த இரண்டு போட்டிகளிலும், கோலி பவுண்டரி எல்லை அருகே நின்று கொண்டு அணியை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

வெங்க்சர்க்கார் விமர்சனம்

வெங்க்சர்க்கார் விமர்சனம்

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தான் முன்னாள் வீரர் திலீப் வெங்க்சர்க்கார் கோலி பீல்டிங் நிற்பது குறித்து விமர்சித்துள்ளார். கேப்டன் உள்வட்டத்துக்குள் தான் நிற்க வேண்டும் என்றார் அவர்.

இது உதவாது

இது உதவாது

மேலும், வெங்க்சர்க்கார் கூறுகையில், பவுண்டரி எல்லை அருகே நின்று கொண்டு உங்களால் பீல்டிங் மாற்றங்கள் செய்ய முடியாது. போட்டியை உள்ளே நின்றால் தான் சரியாக பார்க்க முடியும். அவர் செய்வது அவருக்கு உதவாது என்றார்.

பீல்டிங் விமர்சனம்

பீல்டிங் விமர்சனம்

ஏற்கனவே, கோலி மற்ற வீரர்களை பீல்டிங் நிற்க வைப்பதில் கோட்டை விடுகிறார். பீல்டிங் வியூகம் அமைப்பதில் சாமர்த்தியம் போதவில்லை என்ற விமர்சனங்களும் உள்ளன. ஆனால், தற்போது கோலி தான் பீல்டிங் நிற்கும் இடத்திலேயே சொதப்புகிறார் என்ற பேச்சும் கிளம்பி உள்ளது.

Story first published: Saturday, March 16, 2019, 11:12 [IST]
Other articles published on Mar 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+