Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரருக்கு அடித்த மெகா வாய்ப்பு.. ஒருநாள் அணிக்கு நேரடி தேர்வு.. கவலையில் சீனியர் வீரர்- விவரம்

மும்பை: இந்தியாவின் 50 ஓவர் அணியில் அறிமுகமாகி விளையாட தமிழக வீரர் ஒருவருக்கு அழைப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி இம்மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஒருநாள் அணி இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்திய ஒருநாள் அணி

இந்திய ஒருநாள் அணி

இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தான் முதலில் (டிசம்பர் 26) தொடங்குகிறது. ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 19ம் தேதியன்று தான் தொடங்கவுள்ளது. எனவே இன்னும் ஒருமாத காலம் அவகாசம் இருப்பதால், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரை பார்த்துவிட்டு, அதன்பின்னர் வீரர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

தமிழக வீரர் தேர்வு

தமிழக வீரர் தேர்வு

இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இருந்து தமிழக வீரர் ஒருவரை இந்திய அணிக்கு அறிமுகம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வெங்கடேஷ் ஐயர் தான் அவர். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக சதம், அரைசதம் என அசத்தி வருகிறார்.

அதிரடி சதங்கள்

அதிரடி சதங்கள்

மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வரும் அவர், ஏற்கனவே 112, 71 போன்ற ஸ்கோர்களை அடித்திருந்த நிலையில் சட்டீஸ்கர் அணிக்கு எதிராக 133 பந்துகளில் 151 ரன்களை விளாசியுள்ளார். இதில் 10 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். எனவே இவரை ஃபினிஷராக இந்திய ஒருநாள் அணிக்குள் இழுத்துக்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Recommended Video

Ruturaj Gaikwad scores another ton, Venkatesh stars with 112 for MP | Vijay Hazare 2021
கவலையில் ஹர்திக்

கவலையில் ஹர்திக்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஃபினிஷராக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக ஃபார்ம் அவுட்டாகியுள்ளார். அவரின் இடத்தை நிரப்ப வெங்கடேஷ் ஐயர் சரியாக இருப்பார் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இவர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகிவிட்ட நிலையில் தற்போது ஒருநாள் போட்டியிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, December 12, 2021, 20:00 [IST]
Other articles published on Dec 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+