இப்படி ஆடினால் டீம்மில் இடம் கிடைக்காது..!! வாய்ப்பை வீணடிக்கும் தமிழக வீரர்..!! ரசிகர்கள் கவலை..!!
பாரில்:அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ. உள்ளது
இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணியின் நடுவரிசையில் இளம் வீரர்களக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் அந்த வாய்ப்பை வீணடித்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் தோல்வியும் தவிர்க்க முடியாமல் போகிறது

மீண்டும் வாய்ப்பு
பார்ல் நகரில் நடைபெற்ற முதல் போட்டியிலும் கூட ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் அவர்களைஅணியிலிருந்து நீக்காமல் பயிற்சியாளர் டிராவிட் மீண்டும் ஒரு வாய்ப்பை தந்தார் ஸ்ரேயாஸ் ஐயர் திறன் நடுவரிசையில் இந்தியாவுக்கு கைக்கொடுக்கும்

அழுத்தம்
இதே போன்று நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர் ஹர்திக் பாண்டியா இல்லாத குறையை போக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களில் ஆட்டமிழந்ததால் வெங்கடேஷ் ஐயர் தனது விக்கெட்டை இழந்துவிட கூடாது என்ற நோக்கத்தில் ஆடினார். இதனால் ரன் அடிக்காமல் அவருக்கு அவரே அழுத்தத்தை கொடுத்தார்

வழக்கமான ஆட்டம்
இதுவே வெங்கடேஷ் ஐயர், தனது வழக்கமான அதிரடியை காட்டி இருந்தால், தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்க முடியும். இந்தியாவின் இலக்கும் 300 ஐ கடந்திருக்கும். ஆனால் வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கே ஆட தெரியாத போல் விளையாடி 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார்

இடத்துக்கு ஆபத்து
பேட்டிங்கில் விட்ட குறையை வெங்கடேஷ் ஐயர் பந்துவீச்சில் சரிக் கட்ட வேண்டும். அதற்கு முதலில் கே.எல்.ராகுல் பந்துவீச வாய்ப்பு தர வேண்டும். அணியில் வாய்ப்புக்காக பல திறமையான வீரர்கள் காத்திருக்க, வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் கிடைத்த வாய்ப்பை வீணடித்து வருகின்றனர். இந்த வாய்ப்பு மீண்டும் வருமா என்பதை நினைத்து பார்த்து இருவரும் விளையாட வேண்டும்.


Click it and Unblock the Notifications