Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இது லிஸ்ட்லயே இல்லையே” ரஜினி-காக மைதானத்தில் வெங்கடேஷ் ஐயர் செய்த விஷயம்.. இணையத்தை கலக்கும் வீடியோ

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் மைதானத்தில் செய்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர் கலக்கி வருகிறார்.

மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் ஏற்கனவே சதங்களை விளாசிய நிலையில் இன்று மீண்டும் சதம் விளாசியுள்ளார்.

வெங்கடேஷ் அதிரடி

வெங்கடேஷ் அதிரடி

இன்றைய போட்டியில் மத்திய பிரதேச அணியும் சண்டிகர் அணியும் நேருக்கு நேர் மோதின. சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில் மிடில் ஆர்டரில் வெங்கடேஷ் ஐயர் சிக்ஸர் மழை பொழிந்தார்.

வைரலான வீடியோ

சிறப்பாக விளையாடிய அவர் 113 பந்துகளில் 151 ரன்கள் அடித்து அசத்தினார். சதமடித்தவுடன் ஒவ்வொரு வீரரும் தனி தனி ஸ்டைலில் கொண்டாடுவார்கள். ஆனால் இன்று வெங்கடேஷ் கொண்டாடிய விதம் புதுவகையாக இருந்தது. இன்று இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருடைய தீவிர ரசிகர் தான் வெங்கடேஷ் ஐயர்.

ஸ்டைல் சல்யூட்

ஸ்டைல் சல்யூட்

சதம் உறுதியான பின்பு, பேட் ஹெல்மெட் ஆகிய அனைத்தையும் கீழே போட்ட வெங்கடேஷ் ஐயர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்று ஸ்டைலாக சல்யூட் போடுவது மற்றும் ஸ்டைலாக கண்ணாடி போடுவது போன்ற விஷயங்களை செய்துகாட்டினார். அதாவது தனது சதத்தை ரஜினிகாந்திற்கு சமர்பிப்பதாக கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil
 சர்வதேச வாய்ப்பு

சர்வதேச வாய்ப்பு

26 வயதாகும் வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் தொடரின் 2வது பாதி ஆட்டத்தில் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் பலனாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் அணியிலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Sunday, December 12, 2021, 18:35 [IST]
Other articles published on Dec 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+