Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ போச்சே..!! படாத இடத்தில் பட்ட பந்து.. கேட்ச் பிடிக்கும் போது விபரிதம்.. கலகல காட்சிகள்

தர்மசாலா: இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் போது மைதானத்தில் ஒரு நகைச்சுவை சம்பவம் நடைபெற்றது.

சமிபிரதாய ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் இலங்கை வீரர்கள் களமிறங்கினர்.

இந்திய அணியில் ஹர்சல் பட்டேலை தவிர முற்றிலும் வேறு பந்துவீச்சாளர்களை கொண்டு ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினார்.

பவர்பிளே

பவர்பிளே

இந்திய அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறி வருகின்றனர். முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் அபாரமாக பந்துவீச, இலங்கை அணி பவர் பிளேவில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ரவி பிஸ்னாய்

ரவி பிஸ்னாய்

இதே போன்று ரவி பிஸ்னாயின் சுழற்பந்துவீச்சும் இலங்கை வீரர்களுக்கு நெருக்கடியை தந்தது. லியாங்கனே 9 ரன்கள் எடுக்கும் போது அவர் பந்தில் ஸ்டம்புகள் சிதற, பெவிலியன் திரும்பினார். கடந்த தொடரில் இந்தியாவின் ஃபில்டிங் மோசமாக அமைந்தது.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

ஆனால், இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக ஃபில்டிங் செய்து வருகிறது. குறிப்பாக, தினேஷ் சந்திமால் அடித்த கட் ஷாட்டில் பந்து புல்லட் வேகத்தில் செல்ல, அதனை வெங்டேஷ் ஐயர் அபாரமாக பிடித்தார். ஆனால் பந்தை பிடிக்கும் போது அது படாத இடத்தில் பட்டது. இதனால் முதலில் வலியில் அவர் துடித்தது போல் இருந்தாலும், பின்னர் அவரை பார்த்து அனைவரும் சிரித்தனர்.

கிண்டல்

கிண்டல்

இதனையடுத்து, வீரர்கள் அவரை கிண்டல் செய்ய, பின்னர் அவர் தொடர்ந்து ஃபில்டிங்கில் ஈடுபட்டார். இதே போன்று, நிசாங்காவின் கேட்சையும் வெங்கடேஷ் ஐயர் பிடித்தார். இருப்பினும் சனாகாவின் ஒரு கடினமான கேட்சை ஜடேஜா விட்டார். ஆனால் அது ஜடேஜா மீது தவறு இல்லை.

Story first published: Sunday, February 27, 2022, 20:41 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+