ஐபிஎல் தொடர் முடிந்த உடனே திருமணம்.. காதலியை கரம் பிடித்த தமிழக வீரர்.. மனைவி யார் தெரியுமா?
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயரின் வாழ்க்கையில் தற்போது மகிழ்ச்சி பூத்திருக்கிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு முக்கிய ஆல்ரவுண்டராக திகழ்வார் என ரசிகர்கள் வெங்கடேஷ் ஐயரை எதிர்பார்த்தனர். பேட்டிங்கில் அதிரடியாகவும் பந்துவீச்சில் சில முக்கிய விக்கெட்டுகளை எடுப்பதிலும் வெங்கடேஷ் ஐயர் திறமை மிக்கவராக திகழ்ந்தார்.

எனினும் சில காரியங்களால் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை வெங்கடேஷ் ஐயர் இழந்தார். இந்த நிலையில் மீண்டும் 2024 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசனில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வெங்கடேஷ் ஐயர் முக்கிய காரணமாக இருந்தார். 14 போட்டிகளில் விளையாடி 370 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு அரை சதமும் அடங்கும்.
இறுதிப் போட்டியில் வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் தான் கேகேஆர் அணி 10 புள்ளி 3 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர், தன்னுடைய நீண்ட கால காதலியான சுருதி ரகுநாதன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு வருண் சக்கரவர்த்தி விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.

ரகுநாதன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து இருந்திருக்கிறார். பி எஸ் சி கல்லூரியில் பிகாம் பட்டதாரியும் ஃபேஷன் மேனேஜ்மென்ட் மாஸ்டர் டிகிரி ஸ்ருதி ரகுநாதன் படித்திருக்கிறார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர், கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளியாகியது.
இந்த நிலையில் அது எல்லாம் வெறும் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய காதலியை அவர் கரம் பிடித்துக் கொண்டார். வெங்கடேஷ் ஐயருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வந்துள்ளனர். இந்த திருமணம் வெங்கடேஷ் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications