இந்திய கிரிக்கெட் அணி கோச் பதவிக்கு அப்ளிகேஷன் போட்ட வெங்கி.. சாஸ்திரியுடன் பலப்பரிட்சை!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேச பிரசாத்தும் இணைந்துள்ளார். அப்ளிகேஷன் போட்டு வைத்துள்ளதாக பிரசாத் உறுதி செய்துள்ளார்.
தலைமை பயிற்சியாளர் இன்றி தவித்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. இப்பயணம் முடிவடைந்ததும், பயிற்சியாளர் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது.
ரவி சாஸ்திரி, பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சந்தீப் பாட்டில் உள்ளிட்டோர் இப்பதவிக்கு காய் நகர்த்தி வரும் நிலையில், வெங்கடேச பிரசாத்தும் விண்ணப்பம் அளித்துள்ளார்.

பயிற்சியாளர்
தற்போது ஜூனியர் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவராக உள்ள பிரசாத், 2007 முதல் 2009வரை இந்திய அணியின் பவுலிங் கோச்சாக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில்தான் இந்தியா முதல்முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

ஸ்லோ பவுலிங்
இந்திய அணிக்காக ஜவகல் ஸ்ரீநாத்துடன் இணைந்து வேகப்பந்து வீச்சை தொடங்கி வந்தவர் வெங்கடேச பிரசாத். ஸ்ரீநாத் தனது வேகத்தால் எதிரணியினரை மிரட்டுவார். வெங்கடேச பிரசாத் ஸ்லோ பந்துகளுக்கு ஃபேமசானவர்.

அசத்தல் பங்களிப்பு
33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 96 விக்கெட்டுகளையும், 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 196 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர் வெங்கடேச பிரசாத்.

அதிரடி பவுலிங்
1999 உலக கோப்பையில், மான்செஸ்டரில் நடந்த போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கங்குலி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கு உதவியவர் வெங்கடேச பிரசாத்.


Click it and Unblock the Notifications