Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டை பார்த்தாலே சிரிப்பு வருது.. கேவலமாக இருக்கு.. தேர்வுக்குழுவினரை சாடிய ஜாம்பவான்

பெங்களூரு : இந்திய கிரிக்கெட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தால் சிரிப்பாகவும் கேவலமாகவும் இருப்பதாக முன்னாள் வேகபந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்யும் போது பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அணிக்கு தேவையான சில விஷயங்களை மறந்து விட்டு தேர்வு குழுவினர் நடக்கின்றனர்.

Venkatesh Prasad condemns bcci selection committee for not picking jalaj saxena

தேர்வு குழுவினர் இதுபோன்ற தவறு செய்யும் போதெல்லாம் முன்னாள் வீரர்கள் அவர்களை கடுமையாக சாடுவதுண்டு. இப்படித்தான் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து தேர்வு குழுவினர் வாய்ப்பு வழங்கிய போது வெங்கடேஷ் பிரசாத் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தேர்வு குழுவினரை திட்டி தீர்த்துவிட்டார். இதேபோன்று சப்ராஸ்கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்தும் வெங்கடேஷ் பிரசாத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதை அடுத்து அணியில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணி அடுத்த மாதம் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கு முன்னோட்டமாக ஜூன் மாதம் இறுதியில் துலீப் கோப்பையை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அணியில் சஞ்சு சாம்சன், ஜலஜ் சக்சேனா போன்ற முக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடந்து முடிந்த ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜலஜ் சக்சேனா என்ற வீரரை துலீப் கோப்பையில் தேர்வு குழுவினர் தேர்வு செய்யவில்லை.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெங்கடேஷ் பிரசாத் இந்திய கிரிக்கெட்டில் நகைப்புக்குரிய பல விஷயங்கள் நடக்கிறது. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் துலீப் கோப்பை தொடருக்கான தெற்கு அணியில் இடம்பெறாதது வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலம் ரஞ்சிக்கோப்பையில் தேவையில்லாத தொடர் என்ற தேர்வு குழுவினர் நினைத்து விட்டார்களா.

இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா என்று வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். இந்த நிலையில் ஜலஜ் சக்சேனாவுக்கு 36 வயது ஆகிவிட்டதால் இனி இந்திய அணியில் விளையாட வாய்ப்பு குறைவு என்பதற்காகவே சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு தேர்வு குழுவினர் துலீப் கோப்பையில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Sunday, June 18, 2023, 12:55 [IST]
Other articles published on Jun 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+