Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படிலாமா இந்திய அணியில் நடக்கும்? கேஎல் ராகுல் தேர்வு - வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் பிரசாத் !

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணியில் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து இடம் கிடைப்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

கே எல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஃபார்மில் இல்லாத அவரை தொடக்க வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இதன் காரணமாக சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்டில் 22 ,23 ,10 ,2 ஆகிய ரன்களை அடித்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருபது ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார் .

8 ஆண்டுகள்

8 ஆண்டுகள்

கே.எல் ராகுல் 20 ரன்கள் என்ற ஸ்கோரை விட்டு கடந்த 5 இன்னிங்ஸ்களாக தாண்டவில்லை. இந்த நிலையில் ராகுல் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கடேஷ் பிரசாத் , ராகுலின் திறமை மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருடைய செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சராசரியாக வெறும் 34 ரன்கள் மட்டுமே கே.எல ராகுல் அடித்திருக்கிறார்.

வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்

வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் எட்டு ஆண்டுகளாக இருக்கும் கேஎல் ராகுலுக்கு இது மிகவும் மோசமான செயல்பாடு ஆகும். கேஎல் ராகுல் போல் மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி நான் சமீபத்தில் பார்த்ததில்லை. ஏற்கனவே அதிக வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். சுப்மன் கில் போன்ற வீரர்கள் எல்லாம் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். ரஞ்சி கிரிக்கெட்டில் சர்பிராஸ்கான் சதத்திற்கு மேல் சதமாக அடித்து வருகிறார்.

 எதுக்கு துணை கேப்டன் பதவி?

எதுக்கு துணை கேப்டன் பதவி?

ராகுலை காட்டிலும் இவர்கள்தான் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்க தகுதியானவர்கள். ஆனால் ராகுல் போன்ற நபர்களெல்லாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் ரன் சேர்க்காத நிலையில் கூட தொடர்ந்து வாய்ப்பு கிடைத்துக் கொண்டே வருகிறது. ஆனால் மற்றவர்களுக்கு இந்த நிலை கிடையாது. இந்த விஷயத்தை மேலும் குழப்பமாக்கும் வகையில் ராகுல் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வின் போன்ற சிறந்த கிரிக்கெட் அறிவுடைய வீரர் இருக்கும் நிலையில் அவர்தான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வேண்டப்பட்டவர்

வேண்டப்பட்டவர்

அஸ்வின் இல்லையென்றால் புஜாரா, ஜடேஜா போன்ற வீரர்கள் எல்லாம் இருக்கிறார்கள். மாயங் அகர்வால் ராகுலை விட பெரிய தாக்கத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்திருக்கிறார். விகாரி அப்படித்தான் நிலைமை அப்படி இருக்க ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவது அவருடைய செயல்பாடு காரணமாக அல்ல வேண்டப்பட்டவர் என்பதற்காக தான் என நான் நினைக்கிறேன். தொடர்ந்து ரன் குவிக்க தடுமாறி வருவதையே தொடர்கதையாக ராகுல் செய்து வருகிறார். அதுவும் எட்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் ராகுல் தன்னுடைய திறமைக்கு ஏற்ப பெரிய செயல்பாடுகளை இதுவரை செய்ததில்லை.

அச்சம்

அச்சம்

ஆனால் ராகுல் குறித்து யாருமே பேச மாட்டார்கள்.கே எல் ராகுலுக்கு எதிராக கருத்தும் சொல்ல மாட்டார்கள். அதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்ற பயம் தான். கே எல் ராகுல் ஒரு அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக பேசினால் ஐபிஎல் இல் பயிற்சியாளர் நிர்வாகி போன்ற வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என முன்னாள் வீரர்கள் அச்சப்படுகிறார்கள்.

கடும் சாடல்

கடும் சாடல்

தற்போது உள்ள வயதான வீரர்கள் எல்லாம் ஆமாம் சாமி என்று கண்மூடித்தனமாக செயல்படுகிறார்கள். முன்பெல்லாம் நம் கூட இருப்பவர்கள் நம்மை விமர்சித்து செதுக்குவார்கள் ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. யாரும் உண்மையைப் பேச தயாராக இல்லை என்று வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் டிராவிடை போல் கே எல் ராகுல் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்கிறது என்பதை மறைமுகமாக வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

Story first published: Saturday, February 11, 2023, 19:02 [IST]
Other articles published on Feb 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+