Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு மட்டும் தனிச் சட்டமா?அந்த காலத்துல எப்படி இருக்கும் தெரியுமா?சூடான வெங்கடேஷ் பிரசாத்

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது ஏன் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

விராட் கோலி அண்மை காலமாக பெரிய ஸ்கோர் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 11 மற்றும் 20 ரன்கள் மட்டுமே கோலி எடுத்தார்.

இதே போன்று இங்கிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் முறையே 1 ரன் மற்றும் 11 ரன்னில் விராட் கோலி பெவிலியன் திரும்பினார்.

வெங்கடேஷ் பிரசாத் கண்டனம்

வெங்கடேஷ் பிரசாத் கண்டனம்

விராட் கோலியின் பேட்டிங் சொதப்பலால் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், விராட் கோலி மீது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை அணியிலிருந்து நீக்க முடியாது என்று ஆணித்தரமாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்திய அணியின் இந்த முடிவுக்கு வெங்கடேஷ் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கங்குலி காலம்

கங்குலி காலம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ஒரு காலம் இந்திய கிரிக்கெட்டில் இருந்தது. நீங்கள் பார்மில் இல்லை என்றால், நீங்கள் யார், என்ன செய்தீர்கள் என்பதை எல்லாம் யாரும் பார்க்க மாட்டார்கள், அணியை விட்டு நீக்கிவிடுவார்கள். கங்குலி, சேவாக், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, சிறப்பாக செயல்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிப்பார்கள்.

விதி மாற்றப்பட்டது

விதி மாற்றப்பட்டது

இது தான் பிசிசிஐயின் விதியாக இருந்தது. தற்போது இது மாற்றப்பட்டுள்ளது. தற்போது எல்லாம் ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு ஓய்வு வழங்குகிறார்கள். ஓய்வு வழங்கினால் எப்படி அவர்களால் முன்னேற முடியும்.நமது நாட்டில் இப்போது திறமைகள் கொட்டி கிடக்கின்றன. இதனால் இனி கடந்த கால சாதனைகளை வைத்து கொண்டு அணியில் தொடர்ந்து விளையாட முடியாது.

அணில் கும்ப்ளே நிலைமை

அணில் கும்ப்ளே நிலைமை

இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானான அனில் கும்ப்ளேவை அணியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். அவர் தேவைப்படும் போது எல்லாம் வெளியே அமர்ந்து இருக்கிறார், இந்திய அணியின் நன்மைக்காக சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.

Story first published: Monday, July 11, 2022, 15:34 [IST]
Other articles published on Jul 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+