For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி 20 ஆண்டுகளில் இப்படி பார்த்ததே இல்லை.. நியாயம் வேண்டாமா? ராகுல் குறித்து வெங்கடேஷ் பிரசாத்

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் டெல்லி டெஸ்ட் போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேத்தினார்.

இந்த நிலையில் கே எல் ராகுல் குறித்து கடந்த வாரம் கடும் கருத்துக்களை வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டார்.தற்போது மீண்டும் ராகுல் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து சமூக வலைத்தளத்தில் வெங்கடேஷ் பிரசாத் பதிவிட்ட கருத்துக்கு ரசிகர்கள் ஆமோதித்து வருகின்றனர்.

இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கேஎல் ராகுல் வேண்டப்பட்டவர் என்பதால்தான் வாய்ப்பு வழங்கப்படுவதாக வெங்கடேஷ் பிரசாத் கடுமையான கருத்துக்களை முன் வைத்தார்.

 பார்த்ததே இல்லை

பார்த்ததே இல்லை

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த மோசமான விசயம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கே எல் ராகுல் ஒரு தொடக்க வீரர் போல் என் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கு இன்னும் அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கி வருவது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் இவ்வளவு குறைந்த ரன்களை அடிக்கும் வீரருக்கு யாரும் வாய்ப்பு கொடுத்து இருக்க மாட்டார்கள்.

அநீதி

அநீதி

கேஎல் ராகுலை மீண்டும் அணியில் சேர்த்ததன் மூலம் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு வேண்டுமென்றே அநீதி செய்யும் விஷயமாகும். ஷிகர் தவான் டெஸ்ட் போட்டியில் சராசரியாக 40 ரன்கள் வைத்திருக்கிறார்.மாயங் அகர்வால் 41 ரன்களுக்கு மேல் அடித்து இரண்டு இரட்டை சதம் அடைத்திருக்கிறார். சுப்மன் கில் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். சப்ராஸ்கான் எவ்வளவு நாள் தான் காத்திருக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

வேறு ஆளே இல்லையா

வேறு ஆளே இல்லையா

ராகுலை அணியில் மீண்டும் சேர்ப்பது மூலம் நீதி மீதான நம்பிக்கையே ஆட்டம் காணுகிறது. சிவசங்கர் தாஸ் திறமை வாய்ந்த வீரராக இருந்தார். இதேபோன்று சடகோபன் ரமேஷும் 38 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருந்தார். ஆனால் இருவரும் இந்திய அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை. ஆனால் ராகுலுக்கு மட்டும் இவ்வளவு வாய்ப்பு ஏன்? நீங்கள் ராகுலை தொடர்ந்து அணியில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவில் பேட்டிங் செய்ய ஆட்களே இல்லை என்ற பொய்யான கருத்தை உலகத்திற்கு சொல்கிறீர்கள்.

டாப் 10 வீரர் கிடையாது

டாப் 10 வீரர் கிடையாது

கடைசி ஐந்து வருடங்களாக கேஎல் ராகுலின் சராசரி 47 இன்னிங்ஸில் 27 க்கு குறைவாக சென்று விட்டது. என்னைப் பொறுத்தவரை இந்திய நாட்டில் தற்போது சிறந்த தொடக்க வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால் கே எல் ராகுல் முதல் பத்து இடத்திற்குள் கூட வர மாட்டார். குல்திப் யாதவ் போன்ற ஆட்டநாயகன் விருது வென்றும் அடுத்த போட்டியில் அதிரடியாக நீக்கப்படுகிறார்கள். ஆனால் ராகுலுக்கு மட்டும் எப்படி எண்ணிக்கையை இல்லாமல் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

கேஎல் ராகுல் நிச்சயமாக ஓடும் குதிரை கிடையாது. இது வருத்தமான விஷயம் என்று வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். ஏற்கனவே பல்வேறு வீரர்களும் கே.எல் ராகுல் மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் டெல்லி டெஸ்டில் கடைசி இன்னிங்ஸில் கே எல் ராகுல் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அவரை இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது என்பது மிகவும் தவறான விஷயமாக கருதப்படும். இதனால் ராகுலின் காலம் கைநழுவி சென்று கொண்டிருக்கிறது.

Story first published: Saturday, February 18, 2023, 20:24 [IST]
Other articles published on Feb 18, 2023
English summary
Venkatesh prasad tears apart kl rahul ad indian team management
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+